வழுக்கை தலைக்கு காரணம் இதுதான் - குளிக்கும்போது செய்யும் 5 தவறுகள்

குளிக்கும்போது செய்யும் 5 தவறுகளால் வழுக்கை தலை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:28 AM IST
  • குளிக்கும்போது செய்யும் தவறுகள்
  • இந்த தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது
  • தலை முடி உதிர்வை தடுக்கலாம்
வழுக்கை தலைக்கு காரணம் இதுதான் - குளிக்கும்போது செய்யும் 5 தவறுகள் title=

குளிக்கும்போது இதுபோன்ற சிறிய தவறுகளை நாம் அடிக்கடி செய்வோம். ஆனால் நாளடைவில் அது உங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். தவறான சோப்பைத் தேர்ந்தெடுப்பது அல்லது குளியலறையை சுத்தமாக வைத்திருக்காதது போன்றவை முக்கிய காரணம். இதைத் தவிரவும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

1. குளித்த உடன் மாய்ஸ்சரைசர்

குளித்த உடனேயே மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால், அது உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும், ஏனென்றால் சிறிது நேரம் கழித்து அதனைப் பயன்படுத்துவது என்பது பயனற்றது.

மேலும் படிக்க | இதய நோயின் தீவிர அறிகுறிகள் - அலட்சியமாக இருக்காதீர்கள்

2. தினமும் முடியைக் கழுவக்கூடாது

பெரும்பாலான மக்கள் குளிக்கும்போது தலைமுடியை அடிக்கடி ஷாம்பு போட்டுக் கழுவுவார்கள். ஆனால் உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் இருந்தால் தினமும் தலையைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. முடியை அடிக்கடி கழுவுவது முடியை வறண்டு, உயிரற்றதாக மாற்றிவிடும். இதனால் வழுக்கை தலை பிரச்சனையை எதிர்கொள்வீர்கள். 

3. குளியலறை மின்விசிறி

குளியலறையில் விசிறி தேவையற்றது. ஒருவேளை உங்கள் குளியலறையில் விசிறி இருந்தால் அதனை அகற்றிவிடுங்கள். இல்லையென்றால், குளியலறையில் இருக்கும் பாக்டீரியாக்கள், அறை முழுவதும் பரவ வாய்ப்புகள் உள்ளன. இதுமட்டுமில்லாமல் குளியலறையில் ஈர்ப்பதம் மெதுவாக பரவி சுவர்கள் சேதமடையத் தொடங்கும். 

4. ஈரமான துண்டுகள் 

குளித்த பிறகு ஈரமான துண்டுகளை பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் ஈரமான துண்டுகள் பல வகையான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை உருவாக்குகின்றன. அழுக்கு துண்டுகள் பூஞ்சை, அரிப்பு மற்றும் பல வகையான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக்குகின்றன.

மேலும் படிக்க | கோடையில் உடல் நலம் காக்கும் வெங்காயத்தின் நன்மைகள்

5. சரியான சோப்பைத் தேர்ந்தெடுப்பது

முதலில், குளிக்கும் போது, ​​நீங்கள் நல்ல சோப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க. ஏனெனில் தவறான சோப்பைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு பல முறை தொற்றுநோயை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | இந்த மூலிகை ஷாம்பூவை தயார் செய்து முடியை பளபளப்பாகவும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News