இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை கொழுப்பு தான். இன்று இளவயதிலேயே அதிக எடையை கொண்டிருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும். தொப்பை கொழுப்பு ஒரு நபரின் நம்பிக்கையையும் இழக்க நேரிடும் மற்றும் பொது இடத்தில் சங்கடத்தை சந்திக்க நேரிடும்.
தொப்பை கொழுப்புக்கான ஆயுர்வேத சிகிச்சை
உண்மையில், எடை இழப்பு தற்போதைய நேரத்தில் ஒரு சவாலாக உள்ளது, அத்துடன் தொப்பையை குறைப்பது என்பது ஒரு மிகவும் கடினமான விஷமாக ஆகிவிட்டது. தொப்பை கொழுப்பை குறைக்க பலர் மருந்துகளை நாடுகிறார்கள், அதனால் நம் உடலில் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும், தொப்பையை குறைக்கவும் வீட்டு வைத்தியம் டிப்ஸ் உள்ளது. அதன்படி உடல் எடையைக் குறைக்கும் ஒரு தனித்துவமான ஆயுர்வேத செய்முறையை உள்ளது, அதை பின்பற்றினால் தொப்பை கொழுப்பு அசால்ட்டாக குரைக்கலாம்.
மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!
தொப்பையை குறைக்க உதவும் திரிபலா
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, திரிபலா உடலில் உள்ள நச்சுகளை அகற்றி, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. திரிபலா சூர்ணம் தொப்பையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது. அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பைக் காணாமல் போயிடும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, தினமும் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.
திரிபலா பொடியை இப்படி பயன்படுத்துங்கள்
தொப்பையை குறைக்க, திரிபலாவை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிடலாம். இதற்கு திரிபலாவை தண்ணீரில் ஊறவைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரை வடிகட்டி இளஞ்சூடாக குடிக்கவும். சில நாட்களில் நீங்கள் விரும்பிய முடிவைப் பெறத் தொடங்குவீர்கள்.
தொப்பை கொழுப்பை குறைக்க மற்ற சில வழிகள்
* காலையில் எழுந்து வெறும் வயிற்றில் 1-2 கிளாஸ் தண்ணீர் குடித்தால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்தால், அதிக உணவு உண்ணும் ஆசை குறையும்.
* இனிப்பு பொருட்களை உட்கொள்வதைக் குறைக்கவும்.
* மெதுவாக உட்கார்ந்து சாப்பிடுவதைப் பழக்கப்படுத்துங்கள், அது உணவை ஜீரணிக்கும்.
* அதிக எண்ணெய் பொருட்கள், பர்கர்கள், பீட்சா, சீஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* உங்கள் பிளாட் 4-5 மாடிகளில் இருந்தால், லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR