நியாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்: உங்கள் வயது அதிகரிக்கத் தொடங்கும் போது, நினைவாற்றலும் பலவீனமடையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், பல நேரங்களில் நாம் சில பொருட்களை வைத்த இடங்களையும், நாம் பேசிய சில வார்த்தைகளையும் மறந்துவிடுகிறோம். இருப்பினும், மறதி பிரச்சனை சில நேரங்களில் இளைஞர்களிடமும் காணப்படுகிறது. ஆனால், இதற்கு கவலை கொள்ளத் தேவையில்லை. சில இயற்கையான வழிகளில் நினைவாற்றலை அதிகரிக்கலாம்.
நினைவாற்றலை அதிகரிக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம். இவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால், நமது ஞாபக சக்தியை எளிதாக அதிகரிக்க முடியும். தினமும் பாதாம், வால்நட் அல்லது முந்திரி சாப்பிட்டு வந்தால், உங்கள் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும் சில சிறப்பு உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்
- முட்டைக்கோஸ், வெங்காயம், நூல்கோல் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் நன்றாக இருக்கும். இந்த காய்கறிகளில் ஃபிளாவனாய்டுகள் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
- பால், தயிர், கொழுப்பு நிறைந்த மீன்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், பூசணி விதைகள், கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க | எடையை குறைக்க இந்த பழங்களுக்கு 'நோ' சொல்லிடுங்க, சட்டுனு குறைக்கலாம்
- கேரிட்டினாய்ட்ஸ் எனப்படும் தனிமங்கள் நிறைந்த முளைகள், கீரை, கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிகிழங்கு போன்ற காய்கறிகளை உட்கொள்வதும் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. ஆகையால் பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- முட்டையின் மஞ்சள் கரு, முழு தானியங்கள், சோயாபீன்ஸ் மற்றும் எள் விதைகளில் லெசித்தின் என்ற சத்து உள்ளது. இது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கவும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
- முட்டை, கோழி, மீன் மற்றும் பால் போன்ற வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
- எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், கொடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் போன்றவற்றையும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களையும் உட்கொள்வதன் மூலம் உங்கள் நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாடு சீராக இருக்கிறது.
- பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, அத்திப்பழம் மற்றும் விதைகள் போன்ற வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். ஆகையால் மூளை திறம்பட வேலை செய்து நினைவாற்றல் அதிகரிக்க, உங்கள் அன்றாட உணவில் இந்த விஷயங்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? இதோ...இந்த மேஜிக் பானம் சுகரை கட்டுப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ