பிஸியான வேலையில் இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாக இருக்கும். சில நேரங்களில், மிகவும் கடுமையாக உழைக்கும் நபர்களுக்கு ஆரோக்கியமான டயட்டை பராமரிப்பது கடினம். இது ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்தையும் ஏற்படுத்தும். பலர், பரபரப்பான வாழ்க்கையால், உடற்பயிற்சிக்கு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாமல் தவிக்கின்றனர். உங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். உடற்பயிற்சி இல்லாமலும் டயட் இல்லாமலும் உடல் எடையை குறைக்கலாம். சரியான நேரத்தில் சாப்பிடுதல், சீரான உணவு, பிரெஷ்ஷான உணவுத் தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பது போன்ற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அலுவலகத்தில் வீட்டில் சிறிய விஷயங்களில் கூட கவனம் செலுத்துவதன் மூலம் பருமன் கணிசமான அளவு குறையும்.
ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவிக் குறிப்புகள்
1. சரியான நேரத்தில் சாப்பிடுதல்:
வயிற்றை காயப்படாமல், ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஏதேனும் ஒரு உணவு அல்லது சிற்றுண்டியை உட்கொள்வதை நோக்கமாகக் கொண்டு, வழக்கமான டயட் அட்டவணையை தயாரிப்பது முக்கியம். இந்த நடைமுறையானது உங்கள் வளர்சிதை மாற்றத்தை திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் ஆற்றல் அளவுகள் நாள் முழுவதும் நிலையானதாக இருப்பதை உறுதி செய்கிறது. கூடுதலாக, பழங்கள், நட்ஸ், வறுத்த பொட்டுக்கடலை, கடலை போன்ற சத்தான தின்பண்டங்களை உங்கள் இடைவேளையின் போது சேர்த்துக்கொள்வது, உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
2. உணவை மென்று சாப்பிடுங்கள்
சிலர் அவசர அவசரமாக உணவு உண்பதால், உணவை சரியாக மென்று சாப்பிடுவதில்லை. இதனால், உணவு சரியாக ஜீரணமாகாது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவை சரியாக மென்று சாப்பிடுங்கள். உணவை சரியாக மெல்லுவதன் மூலம், செரிமானத்தை மேம்படுத்தி, உங்கள் உடல் எடையை (Weight Loss Tips) மிக வேகமாக குறைக்கலாம். உமிழ் நீர் உணவை சரியாக செரிமானம் செய்து உணவை ஆற்றலாக முழுமையாக மாற்றி, கொழுப்பு சேருவதை தடுக்கிறது.
3. சமச்சீர் உணவு:
உங்கள் உடல் எடையை விரைவாகக் குறைக்க விரும்பினால், முதலில் உங்கள் உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சேர்க்கத் தொடங்குங்கள். முக்கியமாக புரோட்டீன் நிறைந்த உணவு உங்களுக்கு மிகவும் முக்கியமானது. புரோட்டின் மட்டுமல்ல நார்சத்துக்கள், வைட்டமின்கள், ஆரோக்கிய கொழுப்புகள், தாதுக்கள், கனிமங்கள் என அனைத்தும் தேவை. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதால் உங்கள் எடையை வேகமாக குறைக்கும். சோயா, பனீர், பலவகையான காய்கறிகள், சாலடுகள், பழுப்பு அரிசி, சிறுதானியங்கள், முளை கட்டிய தானியங்கள், கீரைகள் மற்றும் சூப் போன்ற பல்வேறு வகையான உணவுகளை உள்ளடக்கிய டயட் தேர்வுகள், வயிறு நிறைந்த உணர்வைத் தருவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
மேலும் படிக்க | தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சருமம் அழகு மேம்படும், உடல் இளைக்கும்
4 . துரித உணவுகளை தவிர்க்கவும்:
ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுக்கும் அதே நேரத்தில், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது அவசியம். பீட்சாக்கள், பர்கர்கள், மைதா உணவுகள், சாண்ட்விச்கள், இட்லிகள், தோசைகள், பேஸ்ட்ரிகள், கேக்குகள், சாக்லேட்கள் போன்ற பொருட்களிலிருந்து விலகி இருங்கள். இந்த உணவுகளில் பெரும்பாலும் கொழுப்பு நிறைந்திருக்கும். மேலும், நார்ச்சத்து இல்லாததால், எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
4. பிரெஷ்ஷான உணவுகளை தேர்வு செய்யவும்:
புதிய காய்கறிகள், பழச்சாறுகள், முழு தானியங்கள் மற்றும் பழங்களை உங்கள் உணவின் ஒருங்கிணைந்த கூறுகளாக தேர்வு செய்யவும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த தேர்வுகள் உங்களை உற்சாகமாகவும் துடிப்பாகவும் உணர்வதன் மூலம் உங்கள் நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றன.
இந்த பயனுள்ள உதவிக்குறிப்புகளை உங்கள் தினசரி வழக்கத்தில் இணைப்பதன் மூலம், உங்கள் பணி அட்டவணையை சமரசம் செய்யாமல் உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடையலாம். அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க, அதை கட்டுப்படுத்த மேலே குறிப்பிட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றலாம். இருப்பினும், உங்கள் எடை கட்டுக்குள் வரவில்லை என்றால், கண்டிப்பாக உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இதய ஆரோக்கியம் & ரத்த சர்க்கரையை சீராக்கும் ஒமேகா அமிலங்கள், உடலுக்கு ஏன் அவசியம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ