முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறிகளுள் ஒன்றாகும். இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. முள்ளங்கி பல்வேறு வயிறு தொடர்பான சிக்கல்களுக்கும், குடல் நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முள்ளங்கியின் இலைகள் மற்றும் விதைகளும் கூட உடலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன. இதனால் உடை இழப்பிற்கு பெரிதும் உதவும். முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளதால், இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
ஆனால் சில சூழ்நிலைகளில் இந்த முள்ளங்கி, சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.முள்ளங்கியை சில வகை உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால், நன்மைக்கு பதிலாக உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படலாம். முள்ளங்கியை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்நிலையில், பக்க விளைவுகளை தவிர்க்க முள்ளங்கியுடன் அல்லது முள்ளங்கி சாப்பிட்ட பிறகு எந்தெந்த உணவு பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
முள்ளங்கி மற்றும் பாகற்காய்
முள்ளங்கி சாலட்டை பாகற்காய் காய்கறியுடன் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. முள்ளங்கியை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது அல்லது பாகற்காய் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாது. முள்ளங்கியை பாகற்காய் சேர்த்து சாப்பிட்டால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
முள்ளங்கி மற்றும் வெள்ளரி
முள்ளங்கி மற்றும் வெள்ளரிக்காய் இரண்டும் சாலட்டாக உண்ணப்படுகிறது. முள்ளங்கியுடன் வெள்ளரிக்காய் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். வெள்ளரி மற்றும் முள்ளங்கி சேர்த்து சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.
முள்ளங்கி மற்றும் பால்
பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. முள்ளங்கிக்குப் பிறகு பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் அல்லது புளிப்பு பொருட்களை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். முள்ளங்கி சாப்பிட்ட பின் அல்லது முள்ளங்கி சாப்பிடும் போது பாலில் தயாரித்த பொருட்களை சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படும்.
மீன் உணவுகளுடன் முள்ளங்கி
முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், கர்ப்பிணி பெண்கள் முள்ளங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முள்ளங்கியின் அதிகப்படியான நுகர்வு பசியின்மை, தொண்டை புண் மற்றும் தசைப்பிடிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
ஆரஞ்சுகளுடன் முள்ளங்கி
ஆரஞ்சு மற்றும் முள்ளங்கி சேர்த்து சாப்பிடுவது சாத்தியமில்லை என்றாலும், அது குறித்து அறிந்து கொள்வது நல்லது. ஆரஞ்சு மற்றும் முள்ளங்கி ஒன்றாக சாப்பிட கூடாது. முள்ளங்கியை ஆரஞ்சுப்பழத்துடன் சேர்த்து, அல்லது முள்ளங்கியை சாப்பிட்ட பின் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். முள்ளங்கியை ஆரஞ்சுப்பழத்துடன் சேர்த்து சாப்பிடுவதால் நோய்வாய்ப்பட நேரிடும்.
முள்ளங்கி மற்றும் தேநீர்
பலர் டீயுடன் சாலட் சாப்பிடுகிறார்கள். சாலட் வடிவில் முள்ளங்கியையும் சாப்பிடலாம் என்பதால் இதனை அறிந்து கொள்வது முக்கியம். தேநீருடன் முள்ளங்கியை சாப்பிடுவது செரிமான அமைப்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. முள்ளங்கிக்குப் பிறகு டீ குடிப்பதால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை சட்டென்று குறைக்க உதவும் ‘மேஜிக்’ மசாலாக்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ