ஆரஞ்ச் தோலில் இவ்வளவு விசயங்கள் இருக்கா? இனி தூக்கி போடாதீங்க!

பெரும்பாலும் ஆரஞ்சு பழத்தை எடுத்தாலே நாம் அதன் தோலை உரித்து வீசிவிடுகிறோம், இனிமேல் அப்படி செய்யாமல் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்த வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Mar 27, 2023, 10:27 AM IST
  • ஆரஞ்சு பழத்தோலை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுகிறது.
  • வாயு, நெஞ்செரிச்சல், வாந்தி மற்றும் அமில வெடிப்பு ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது.
  • அதிக கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பருமனான உடலை கொண்டவர்கள் ஆரஞ்சு தோலை சாப்பிடலாம்.
ஆரஞ்ச் தோலில் இவ்வளவு விசயங்கள் இருக்கா? இனி தூக்கி போடாதீங்க! title=

வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு பலவித சத்துக்கள் கிடைக்கும்.  நாம் அனைவருமே ஆரஞ்சு பழத்தோலை உரித்து வீசிவிட்டு அதிலுள்ள பழத்தை மட்டுமே சாப்பிடுவோம், பழத்தில் மட்டும் சத்து இல்லை, ஆரஞ்சில் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது.  இது தெரியாமல் நாம் பல காலமாக ஆரஞ்சு பழத்தை எடுத்தால் அதன் தோலை தூக்கி தூரமாக வீசி விடும் வேலையையே செய்து வருகிறோம்.  ஆரஞ்சு பழத்தோலும் ஆப்பிளின் தோலும் ஒரே மாதிரியானவை, ஏனெனில் இந்த பழங்களின் தோலில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் உள்ளன.  ஒரு நடுத்தர ஆரஞ்சு பழத்தில் 60 ஃபிளாவனாய்டுகள் மற்றும் 170 வெவ்வேறு பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன, இதனை சாப்பிடுவதால் உங்கள் சருமத்தின் தன்மை மேம்படும்.  

மேலும் படிக்க | சுகர் நோயாளிகள் கவனத்திற்கு..இந்த தவறுகளை ஒரு போதும் செய்ய வேண்டாம்

ஆயுர்வேதத்தின்படி, ஆரஞ்சு தோல் டிக்டா (கசப்பானது) மற்றும் லகு மற்றும் ருக்ஷா குணம் கொண்டது. இந்த பண்புகள் காரணமாக இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்துகிறது.  ஆரஞ்சு பழத்தோலை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுகிறது மற்றும் அடிவயிற்றில் உள்ள மந்தத்தை நீக்குகிறது.  இது வாயு, நெஞ்செரிச்சல், வாந்தி மற்றும் அமில வெடிப்பு ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது, மேலும் இது பசியைத் தூண்டுவதிலும், குமட்டலைத் தணிப்பதிலும் நன்றாக வேலை செய்கிறது.  நமது சுவாச மண்டலங்களில் உள்ள சளியை போக்குவதில் ஆரஞ்சு தோல் தூள் உதவி செய்கிறது, இந்த தூளை சாப்பிட்டு வர இருமல், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

ஆரஞ்சு தோல்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, ஆரஞ்சு தோலில்உள்ள டி-லிமோனேனே எனும் எண்ணெய் இரைப்பை அமிலங்கள சரிசெய்து, நமது குடல் இயக்கங்களை பராமரிக்கிறது.  ஆரஞ்சு தோல் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை கரைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, எனவே அதிக கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பருமனான உடலை கொண்டவர்கள் ஆரஞ்சு தோலை சாப்பிட்டு பயன் பெறலாம்.  ஆரஞ்சு தோலிலுள்ள ஹெஸ்பெரிடின் எனப்படும் ஃபிளாவனாய்டு பெருங்குடல் புற்றுநோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றிற்கு எதிராக போராடுகிறது.  ஆரஞ்சு தோல்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும், தூக்கத்தைத் தூண்டவும் பயன்படுகிறது.

ஆரஞ்சு தோலை முகத்திற்கு பயன்படுத்தினால் முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் சமன்செய்யப்பட்டு, சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.  உலர்ந்த ஆரஞ்சு தோல் பவுடர் சருமத்தில் இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர்களாக செயல்பட்டு இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.  முகத்திலுள்ள மாசு மற்றும் கரும்புள்ளிகளை ஆரஞ்சு தோல் நீக்குகிறது, பாக்டீரியாவால் ஏற்படும் பருக்களையும் இது சரிசெய்கிறது. சமையலிலும் ஆரஞ்சு தோல் முக்கிய பங்கை வகிக்கிறது, ஆரஞ்சு தோலைக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு மிட்டாய்கள் உங்கள் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாது உங்களது பசியும் மேம்படுகிறது.

மேலும் படிக்க | கோடையில் காலியாகும் நார்ச்சத்து: மாதுளையில் இருக்கும் புத்துணர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News