தீபாவளி டயட்: அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

Diwali 2023 Diet Tips Tamil: தீபாவளியன்று நிறைய பலகாரங்களை சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் தப்பிப்பது எப்படி? டயட் டிப்ஸ் இதோ!

Written by - Yuvashree | Last Updated : Nov 12, 2023, 10:43 AM IST
  • தீபாவளி சமயத்தில் நாம் அதிகம் சாப்பிடுவது வழக்கம்.
  • இந்த சமயத்தில் வெயிட் கூடாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
  • இதோ சில சிம்பிள் டிப்ஸ்!
தீபாவளி டயட்: அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது எப்படி?  title=

தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களுக்கும் பல வைகயான பலகாரங்களுக்கும் பஞ்சமே இருக்காது. அதிரசம், முறுக்கு, சொய்யம், ஜாங்கிரி, ஜிலேபி, குலாப் ஜாமுன் என வீட்டில் செய்யும் பலகாரங்களுக்கு பஞ்சமே இருக்காது. வீட்டில் செய்பவை மட்டுமன்றி அக்கம் பக்கத்து வீட்டில் செய்யும் பலகாரங்களும் தாறுமாறாக வந்து சேரும். டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை கால சமயங்களில் தடுமாறுவதுண்டு. அப்படி, தீபாவளி சமயத்தில் நிறைய சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் பார்த்துக்கொள்வது எப்படி? இதோ சில டிப்ஸ். 

1.என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்:

தீபாவளி சமயத்தில் நம் வீட்டில் இருக்கும் போதே கண்டிப்பாக டயட்டை கடைபிடிக்க கடினமாக இருக்கும். இதில், உறவினர்கள் வீட்டிற்கும் பலர் செல்வதுண்டு. எனவே, முன்  கூட்டியே நீங்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட உள்ளீர்கள், எந்த அளவு சாப்பிட உள்ளீர்கள் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். அதற்காக மனதளவில் தயாராகிக்கொள்ளுங்கள். உங்களுக்கே வரம்பு மீறி சாப்பிடுகிறோமா இல்லையா என்பது தெரியும். எனவே, சாப்பிட்ட பின்பு நீங்கள் என்னென்ன எடுத்துக்கொண்டீர்கள் என்பதை கலோரி கௌண்டரில் சேர்த்து குறிப்பெடுத்து கொள்ளுங்கள். 

2. சாப்பிட்ட பின் என்ன செய்ய வேண்டும்? 

காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேளை சாப்பிட்ட பின்பும் நீங்கள் ஒரு வேலையை செய்தால் கண்டிப்பாக நீங்கள் வெயிட் ஏறாமல் தப்பிக்கலாம். என்ன உணவு சாப்பிட்டாலும் சரி, அதன் பிறகு 10-15 நிமிடம் வரை நன்றாக நடைபயிற்சி செய்யுங்கள். தீபாவளி சமயம் என்பதால் இதற்கு பெரிதாக நேரம் இருக்காது. எனவே, இரண்டு அல்லது மூன்று மாடி படிகளை இரண்டு முறை ஏறி இறங்குகங்கள். இதனால், நீங்கள் இனிப்பு அல்லது பிற உணவுகள் சாப்பிட்ட பிறகு உடலில் ஏறிய கொழுப்புகள் கரையும். உணவு விரைவில் செரிமானம் ஆவதற்கும் இந்த பயிற்சி உதவும். 

3.உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டியது..

எப்போதும் சாப்பிடும் உணவு முறையை விட தீபாவளியன்று சாப்பிடும் உணவுகள் சற்று வித்தியாசமாக இருக்கும். எனவே, அரிசி சாதத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்த்து காய்கறிகளையும் புரதம் நிறைந்த பொருட்களையும் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு அவ்வளவு எளிதாக பசிக்காது. அதிகம் சாப்பிடுவதையும் இந்த முறையால் தவிர்த்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | எண்ணெய் குளியலும் முடி பாதுகாப்பும்! தீபாவளி கங்கா ஸ்னானம் ஆச்சா? கூந்தல் வளர டிப்ஸ்

4.சமமான கலோரி அளவு:

வெளியில் இருந்து வாங்கிய இனிப்புகளை விட, வீட்டில் செய்த இனிப்பில் கலோரியின் அளவு குறைவாகவே இருக்கும். அதிகமாக இனிப்பு சாப்பிட்டு விட்டீர்கள் என்றால், அதற்கடுத்து நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரியின் அளவை குறைத்து கொள்ளுங்கள். இதனால், உடல் எடை கூடாமல் தப்பிக்கலாம். 

5.நீர்ச்சத்து முக்கியம்..

நாம், பல சமயங்களில் தாகத்தையும் பசியையும் சேர்த்து குழப்பிக்கொள்வதுண்டு. அதனால் எப்போதும் நிறைய தண்ணீர் குடிப்பது சிறந்தது. இதனால் பசி உணர்வையும் நீங்கள் தவிர்க்கலாம். 

6.தீபாவளிக்கு அடுத்து இருக்க வேண்டிய டயட்..

தீபாவளி போன்ற பண்டிகை கால சமயங்களில் டயட் இன்றி சாப்பிட்டாலும், அதற்கடுத்து வரும் நாட்களில் ஸ்டிரிக்ட் ஆன டயட் இருப்பது கட்டாயம். அது மட்டுமன்றி, தினமும் நீங்கள் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சி நேரத்துடன் கூடுதலாக 10 நிமிடங்கள் சேர்த்து உடற்பயிற்சி செய்யவும். 

மேலும் படிக்க | ஆஸ்துமா நோயாளிகள் தீபாவளி புகையில் இருந்து தப்பிப்பது எப்படி? இதோ 5 டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News