Aloe Vera: இவர்கள் கட்டாயமாக கற்றாழையை பயன்படுத்தக் கூடாது!!

சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கற்றாழை உட்கொள்ளக்கூடாது. யார் யார் கற்றாழையைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2021, 07:34 AM IST
  • மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனை இருந்தால், கற்றாழை சாப்பிட வேண்டாம்.
  • கர்ப்ப காலத்தில் கற்றாழையை உட்கொள்வது கருப்பை சுருங்கும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களும் கற்றாழை சாப்பிடக்கூடாது.
Aloe Vera: இவர்கள் கட்டாயமாக கற்றாழையை பயன்படுத்தக் கூடாது!! title=

Side Effects of Aloe Vera: கற்றாழை அதன் மருத்துவ குணங்கள் காரணமாக பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய நாம் அதை தடவிக்கொள்கிறோம். சில உடல் ரீதியான பிரச்சனைக்கு அதை மருந்தாகவும் உட்கொள்கிறோம்.

எனினும், கற்றாழையை (Aloe Vera) குறிப்பிட்ட அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். கற்றாழையை அதிகமாக உட்கொள்வது பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

மேலும், சில நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கற்றாழை உட்கொள்ளக்கூடாது. யார் யார் கற்றாழையைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனை உள்ளவர்கள்

உங்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனை இருந்தால், கற்றாழை சாப்பிட வேண்டாம். இது வாயுபிரச்சனையை இன்னும் அதிகமாக்கக்கூடும். மேலும் மலம் கழிக்கும் செயல்முறையில் கற்றாழையால் சில தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால், இதை தவிர்ப்பது நல்லது.

கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில் (Pregnancy) கற்றாழையை உட்கொள்வது கருப்பை சுருங்கும் சிக்கல்களை ஏற்படுத்தும். இது கருச்சிதைவு மற்றும் பிறப்பு குறைபாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால் கருவுற்றிருக்கும் பெண்கள் கற்றாழையை கண்டிப்பாக உட்கொள்ளக்கூடாது.

ALSO READ: பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதா? வறுத்து சாப்பிடுவதா? எதில் நன்மைகள் அதிகம்? 

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் கற்றாழையைப் பயன்படுத்த வேண்டாம்

உங்கள் இரத்த அழுத்தம் (Blood Pressure) குறைந்தால், கற்றாழையைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது. கற்றாழை ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உங்கள் இரத்த அழுத்தம் ஏற்கனவே குறைவாக இருந்தால், கற்றாழையை உட்கொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

இதய நோய் உள்ளவர்கள்

இதய நோய் உள்ள நோயாளிகளும் கற்றாழை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழையை உட்கொள்ளக் கூடாது. கற்றாழையை அதிக அளவில் உட்கொண்டால், அது உடலில் அட்ரினலின் ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையை ஏற்படுத்தும் மற்றும் பதட்டத்தன்மையை அதிகரிக்கும்.

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள்

சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களும் கற்றாழை சாப்பிடக்கூடாது. இது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கக்கூடும். சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழையைப் பயன்படுத்துவதற்கு முன்பு கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை அங்கீகரிக்கவில்லை.)

ALSO READ: Health News: வறுத்த பூண்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News