பல குழந்தைகளுக்கு டெடி பியர் அல்லது சிங்கம் போன்ற பொம்மைகள் மிகவும் பிடிக்கும். இரவில் தூங்குவது முதல் காலையில் எழுந்திருப்பது வரை அவற்றை கூடவே வைத்து கொள்வார்கள். குழந்தைகள் மட்டும் இன்றி சில பெண்களும் இவற்றை செய்கிறார்கள். ஆனால் ஒரு பெண் உண்மையில் 4 சிங்கக்குட்டிகளை கட்டிலில் வைத்து விளையாடுகிறார். கற்பனை கூட செய்ய பார்க்க முடியாத ஒரு செயலை அந்த பெண் செய்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறார். இந்த வீடியோவை பார்ப்பவர்களும் ஒருவித பயத்தில் தான் அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கின்றனர்.
மேலும் படிக்க | கூட்டமான ரயிலில் அந்தரத்தில் தொங்கியபடி ஜம்முன்னு தூங்கும் பயணி..வைரல் வீடியோ..!
ஃபிரேயா ஆஸ்பினால் என்ற பிரிட்டிஷ் விலங்கு ஆர்வலர் நான்கு சிங்கக் குட்டிகளுடன் படுக்கையில் விளையாடிக்கொண்டிருக்கும் அழகான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிங்கக் குட்டிகளுடன் ஃப்ரேயா படுத்திருப்பதைக் காணலாம், மேலும் அந்த சிங்கக்குட்டிகள் அந்த பெண்ணின் செல்லப்பிராணிகளைப் போல அவளைக் கட்டிப்பிடிப்பதை காணலாம். ஃப்ரேயா டாமியன் ஆஸ்பினால் என்ற பிரபலமான விலங்கு பாதுகாவலரின் மகள். இந்த சிங்கக் குட்டிகளை ஒரு நபர் பணத்திற்காக அடைத்து வைத்து கொடுமை படுத்தியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட ஃப்ரீயாவும் அவரது குழுவினரும் அந்த குட்டிகளை காப்பாற்றி உள்ளனர்.
ஃப்ரீயா ஆஸ்பினால் இன்ஸ்டாகிராமில் சிங்கக்குட்டிகள் இரவில் எப்படி தூங்குகின்றன என்பது குறித்த வீடியோக்களை பகிர்ந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, பெரும் சிக்கலில் இருந்த இந்த நான்கு சிங்கக் குட்டிகளைக் காப்பாற்ற உதவியது பற்றி அவர் ஒரு செய்தியை வெளிப்படுத்தி உள்ளார். "பணம் சம்பாதிப்பதற்காக ஒரு நபர் இந்த குட்டிகளிடம் மோசமாக நடந்து கொண்டார். பின்பு அவற்றை காப்பாற்றி குட்டிகளை ஒரு தாயைப் போல் கவனித்துக் கொண்டு வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவை வளரும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "நான் முன்பு மீட்டெடுத்த மற்ற சிறைப்பிடிக்கப்பட்ட சிங்கங்களைப் போலவே, அவர்களின் பிறப்பிடமான ஆப்பிரிக்காவிற்கு அவர்களை திருப்பி அனுப்புவதே திட்டம். ஆனால் இந்த விஷயத்தில் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி இதுதான்" என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு இதுவரை 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் கமெண்ட் செய்துள்ளனர். "என் வாழ்க்கையில் நான் யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை" என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். "சொர்க்கத்தின் வரையறை" என்று ஒரு பயனரும், "அவர் அவர்களின் அம்மா ஆனார்" என்று மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | வெட்ட வெளியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர்! அதிர்ச்சயளிக்கும் சிசிடிவி காட்சிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ