கொரோனா மூளையையும் பாதிக்குமா? ஆய்வுகள் தரும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

கொரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க, உலகம் முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Last Updated : Jun 2, 2020, 03:26 PM IST
    1. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டையில் பிரச்சினை போன்ற வெவ்வேறு விதமான அறிகுறிகள் உள்ளன
    2. கொரோனா வைரஸ் தனது வடிவத்தை மாற்றிக் கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
    3. கொரோனா வைரஸ் நுரையீரலுடன் சேர்ந்து மூளையையும் தாக்கலாம்.
    4. கோவிட் -19 இல் வழக்கமான பொதுவான நரம்பியல் நோய்களான நுகர்திறன் குறைதல், சுவையுணர்வு இழத்தல், தலைவலி, மயக்கம், மற்றும் மூளை பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம்
கொரோனா  மூளையையும் பாதிக்குமா? ஆய்வுகள் தரும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் title=

கொரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க, உலகம் முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியின் முடிவுகள் விசித்திரமான, கவலை தரும் முடிவுகளைத் தருகின்றன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டையில் பிரச்சினை போன்ற வெவ்வேறு விதமான அறிகுறிகள் உள்ளன. பல சமயங்களில் கொரோனா வைரஸ் தொற்று, வாசனையை நுகரும் திறன் மற்றும் சுவை உணரும் திறனைக் குறைக்கிறது அல்லது நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கொரோனா வைரஸ் மூளையைத் தாக்குகிறது என்பது ஒரு புதிய அதிர்ச்சியான விஷயம் .

READ | கொரோனா வைரஸ் பலவீனம் அடைத்ததாக நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை -WHO!

இத்தாலியின் மிலன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் படி, கொரோனா வைரஸ் நுரையீரலுடன் சேர்ந்து மூளையையும் குறிவைக்கிறது. அவை மூளையில் ஊடுருவி, அதன் கட்டமைப்பை மாற்றுவதால், கொரோனா நோயாளிகளின் நுகரும் திறன், சுவை அறியும் திறன் பாதிக்கிறது.  இதற்கு காரணம் என்ன என்பதை இந்த புதிய ஆராய்ச்சி முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தனது வடிவத்தை மாற்றிக் கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள்  கூறுகிறார்கள். எனவே, புதிய ரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கும்போது, ​​50 சதவீத நோயாளிகளுக்கு சுவையறியும் திறன் குறைகிறது அல்லது அடியோடு முடிவுக்கு வந்துவிடுகிறது என்று கூறுகின்றன. 

READ | எச்சரிக்கை! உங்கள் வீடும் இப்படி இருந்தால், கொரோனா தொற்றின் அபாயம் ஏற்படும்!!

அமெரிக்காவின் யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் அமைப்பின் கூற்றுப்படி, கோவிட் -19 சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டன, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய், நரம்பியல் நோய்களை ஏற்படுத்துமா என்பது சரியாக  தெரியவில்லை என்கிறது. 

இந்த ஆய்வின் படி, கோவிட் -19 இல் வழக்கமான பொதுவான நரம்பியல் நோய்களான நுகர்திறன் குறைதல், சுவையுணர்வு இழத்தல், தலைவலி,  மயக்கம், மற்றும் மூளை பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம் என  இத்தாலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

READ | கொரோனா காலத்தில் கர்ப்பவதி.. எப்படி ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது

கடந்த சில நாட்களாக இத்தாலிய விஞ்ஞானிகளும் கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இத்தாலியில் 25 வயதான ரேடியோகிராஃபர் கொரோனா வைரஸால் இறந்தார், அவருக்கு நுகர்திறன் மற்றும் சுவைகளை அடையாளம் காண முடியாமல் சிரமப்பட்டார். அவருக்கு சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் செய்துபார்த்தபோது, ​​ அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. ரேடியோகிராஃபரின் மூளையின் வலது மேன்மடிப்பு நேர்த்தசை மற்றும் ஆல்ஃபாக்டரி குமிழ்களில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்தார்கள். ஆல்ஃபாக்டரி குமிழ்கள், மணத்தை  மூக்கிலிருந்து மூளையின் வலது மேன்மடிப்பு நேர்த்தசைக்கு எடுத்துச் செல்கிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் இந்த பாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளியில் இதுபோன்ற மாற்றம் முதன்முறையாக காணப்பட்டதாக இத்தாலியில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முந்தைய ஆய்வுகளில் 65% கொரோனா நோயாளிகளுக்கு சுவை உணரும், மற்றும் நுகர் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் முறையாக, சுவை மற்றும் வாசனைத் திறன் இழக்கப்படுவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ்கள் மிகவும் சக்திவாய்ந்தவை, அவை மூளையை பாதிப்பதோடு, மூளையில் மாற்றங்களையும் செய்யலாம்.

டாக்டர்கள் சரியான நேரத்தில் ரேடியோகிராஃபருக்கு சிகிச்சையைத் தொடங்கினர், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இப்போது அவரால் முன்பு போல சுவைக்க முடிந்தது. சரியான நேரத்தில் சிகிச்சை இல்லாததால், இதுபோன்ற பாதிப்புகள் தீவிரமடையலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறர்கள். கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு, சுவையுணர் திறன் மற்றும் வாசனை நுகர் திறன் பாதிக்கப்பட்டால், எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை செய்வது அவசியம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கொரோனா வைரஸ் நுரையீரலுடன் சேர்ந்து மூளையையும் தாக்கலாம்.

(மொழியாக்கம் - தி.விக்னேஷ்வரன்)

Trending News