பாதாமை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

Health Benefits Of Soaked Almonds : உடலுக்கு நன்மையளிக்கும் உணவுகளுள் ஒன்று, பாதாம். இதை சாப்பிடுவதற்கு முன்னர், கண்டிப்பாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் என சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது ஏன் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 26, 2024, 01:23 PM IST
  • பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
  • ஊற வைத்து சாப்பிட வேண்டும்
  • ஏன் தெரியுமா?
பாதாமை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்! ஏன் தெரியுமா? title=

Health Benefits Of Soaked Almonds : கடந்த சில ஆண்டுகளாக, உலகளவில் புதுப்புது நோய் பாதிப்புகளும் உடல் நலக்கோளாறுகளும் தோன்றி வருகின்றன. இதனால் விழிப்படைந்துள்ள மக்கள், தற்போது உடலுக்கு கேடு விளைவிக்காத ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர். அப்படி, நமது ஆரோக்கிய டயட்டில் நாம் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளக்கூடிய உணவுகளுள் ஒன்று, பாதாம். இதனை, அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் நன்மைகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்பாேமா? 

பாதாமின் நன்மைகள்:

பாதாமில் வைட்டமின் ஈ, மாக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், பாஸ்பரஸ் உள்பட பல சத்துகள் அடங்கி இருக்கின்றன. உடல் எடையை குறைப்பதில் இருந்து, உடலுகு வலு சேர்ப்பது, மன நிலையை மேம்படுத்துவது, இதய நோய்கள் வராமல தடுப்பது, நீரிழிவு பாதிப்புகளில் இருந்து தப்ப வைப்பது என பாதாமின் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், பாதாம் சாப்பிடும் பெண்களை மார்பக புற்றுநோய் தாக்குவதற்கான சாத்திய கூறுகள் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இன்னொரு ஆய்வில், பாதாம் சாப்பிடுபவர்கள் ரத்த அழுத்த குறைபாடு அற்று இருப்பவர்களாக உள்ளதாகவும், டைப் 2 டயாபிட்டீஸ் நோயாளிகளின் உடல் நலனையும் பாதாம் பத்திரமாக பார்த்துக்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இது, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | உலர் பழங்கள் Vs ஊற வைத்த உலர் பழங்கள்... இரண்டில் எது பெஸ்ட்!

ஊறவைத்த பாதாம்:

பாதாமின் நன்மைகள் குறித்து கேள்விப்பட்டவுடன் உடனே கிச்சனுக்கு சென்று, கை நிறைய எடுத்து அதை சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? கொஞ்சம் பொறுங்க! 

பாதாமை அப்படியே சாப்பிடுவதால் நன்மை  கிடைக்கும் என்றாலும், அதை ஊற வைத்து சாப்பிடுவதாலும் எக்கச்சக்க பலன்கள் கிடைக்கும். எனவே, முதலி 4-5 பாதாமை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். ஊற வைத்த பாதாமை மறு நாள் தோலுரித்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி, சாதாரண பாதாமை சாப்பிடுகையில், அது செரிமானம் ஆகும் நேரத்தை விட, ஊற வைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆவதாக கூறப்படுகிறது. 

ஊற வைத்த பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

>ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் அதில் உள்ள புரத சத்துகள் உடலுக்கு வலு தருவதோடு, பிற உணவுகளில் இருக்கும் புரதத்தையும் ஏற்றுக்கொள்ள உடலை தயார் செய்கிறதாம். 

>பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதால் அது மென்மையாகிறது. மெல்லிய ஜீரண சக்தி கொண்டவர்கள் பாதாமை இப்படி ஊற வைத்தே சாப்பிடலாம். இதனால் விரைவில் ஜீரணம் நடக்கும். 

>ஊற வைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆவதோடு, அதனுடன் எந்த உணவு சேர்த்து சாப்பிட்டாலும் அதையும் எளிதில் ஜீரணமாக்குமாம். 

>ஊற வைத்த பாதாம் ஒரு சிலவற்றை எடுத்துக்கொண்டாலே அது வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை தங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். 

>ஊற வைத்த பாதாமில் Monounsaturated fats எனும் நிறைவுற்ற கொழுப்பு சத்து உள்ளது. எனவே, இது இருதய நலனுக்கும் உறுதியளிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பெரிய தொப்பையை சீக்கிரமாக சின்னதாக்க..படுத்துக்கொண்டே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News