தீக்காயம் ஏற்பட்டால் அச்சம் வேண்டாம்: சிறிய தீக்காயங்களுக்கான தீர்வு வீட்டிலேயே உள்ளது

Home Remedies for Burns: தீக்காயங்கள் ஏற்படுவது சகஜம். இவற்றை ஏற்பட்டவுடன் சரி செய்துவிட்டால், இவற்றால் பிற தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 16, 2022, 06:45 PM IST
  • கற்றாழை ஃபர்ஸ்ட் டிகிரி தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
  • சிறிய தீக்காயங்களை குணப்படுத்த தேன் உதவும்.
  • தீக்காயம் ஏற்பட்டவுடனேயே அந்த இடத்தில் கடலை மாவை தூவி பரப்புவதால், உடனடியாக அந்த காயம் இன்னும் அதிகமாகாமல் தடுக்கப்படுகின்றது.
தீக்காயம் ஏற்பட்டால் அச்சம் வேண்டாம்: சிறிய தீக்காயங்களுக்கான தீர்வு வீட்டிலேயே உள்ளது title=

நமது அன்றாட வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் பல வித காயங்கள் ஏற்படுகின்றன. நமது தினசரி பணிகளை செய்யும் போது, சமயலின் போது, துணிகளை ஐரன் செய்யும் போது என எதிர்பாராத விதமாக தீக்காயங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அவ்வப்போது கை கால்களில் சூடு வைத்துக்கொள்கிறோம். இவை எளிதில் சரியாகி விடும் என்றாலும், சில சமயம் இவை விரைவில் குணமடையாமல் நமக்கு எரிச்சலையும் அதிகமான வலியையும் அளிக்கின்றன.

சில நேரங்களில் தீக்காயங்கள் கொப்புளங்களாக மாறி சருமத்தில் பெரிய வடுக்களை ஏற்படுத்துகின்றன. தீக்காயங்களால் அரிப்பு மற்றும் பிற தோல் பிரச்சனையும் உருவாகலாம். இவற்றிலிருந்து வரும் நீர் மற்ற இடங்களுக்கும் பரவி அரிப்பை அதிகப்படுத்தக்கூடும். நம்மில் பலர் தீக்காயங்களுக்கு எந்த மருத்துவ உதவியையும் நாடுவதில்லை. பின்வரும் வீட்டு வைத்தியங்கள் தோலில் ஏற்படும் சிறிய மேலோட்டமான தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்.

1. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பாரம்பரியமாக பல வீடுகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல் சருமத்தை குணப்படுத்துகிறது. சருமத்தில் ஏற்படும் வடுக்களை மறைக்கச்செய்யவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயில் பல பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது. இது தீக்காயங்களால் தோல் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.

2. கற்றாழை

கற்றாழை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஃபர்ஸ்ட் டிகிரி தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். கற்றாழை தீக்காயத்தைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் காயம் விரைவாக குணமடைகிறது. அந்த இடத்தில் ஏற்படக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் கற்றாழை தடுக்கிறது. கற்றாழை வலியைக் குறைப்பதோடு கொப்புளங்கள் மற்றும் வடுக்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

3. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றை பச்சையாகவோ, வேகவைத்ததாகவோ, தோல் உரிக்கப்பட்ட விதத்திலோ பிசைந்து எரிந்த தோலில் நேரடியாக வைக்கலாம். உருளைக்கிழங்கு தோலுக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், தீக்காயத்தை குணப்படுத்தவும் உதவுகின்றது. தோலில் உலர்ந்த தீக்காயம் ஒப்பீட்டளவில் மிகவும் வேதனையானது மற்றும் குணமடைய அதிக நேரம் எடுக்கும். உருளைக்கிழங்கில் உள்ள சாறுகள் காயத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன. இது குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. தீக்காயம் ஏற்பட்டவுடன் இதை காயத்தில் போட்டு, அதை ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடையை குறைக்கணுமா? இதை மட்டும் குடித்தால் போதும்!! 

4. தேன்

தேன் அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு அருமருந்தாகும். இது சிறிய தீக்காயங்களை குணப்படுத்த உதவும். தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் எரியும் உணர்வை மந்தமாக்குகிறது. தீக்காயம் நன்றாக குணமடையும் வரை தேனை தொடர்ந்து அந்த இடத்தில் தடவ வேண்டும்.

5. கடலை மாவு

தீக்காயம் ஏற்பட்டவுடனேயே அந்த இடத்தில் கடலை மாவை தூவி பரப்புவதால், உடனடியாக அந்த காயம் இன்னும் அதிகமாகாமல் தடுக்கப்படுகின்றது. கடலை மாவு தீக்காயம் அல்லது சூடான எண்ணய் தெறித்ததால் ஏற்பட்ட காயம் ஆகியவற்றின் வீரியத்தைத் தடுத்து, காயம் ஏற்பட்ட இடம் விரைவில் குணமடைய உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவரா? கோவிடினால் அதிக ஆபத்து! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News