தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அறிவித்த நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 20, 2024, 10:43 AM IST
  • தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதி அறிவிப்பு
  • அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும்
  • தவெக தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூவ அறிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அறிவித்த நடிகர் விஜய் title=

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை நடிகர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தவெக மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜய். இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய தேதியில் இருந்து நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பு பேராதரவுடன் நம் அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. 

கழகக் கொடியேற்று விழாவின்போது நமது முதல் மாநில மாநாடு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கை தலைவர்கள், கொள்கைகள், கொள்கை சார்ந்த செயல்திட்டங்களை பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும். மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் படிக்க | சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை! அதிர்ச்சி சம்பவம்!

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப்போகும் கொள்கைகளையும், நாம் அடையப்போகும் இலக்குகளையும், அரசியல் திருவிழாவாகவும், பெரு விழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களின் மனங்களை வெல்லும் வகையில் மாநாடுக்கான வேலைகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில், அதற்கான களப் பணிகளும் தொடங்கப்பட உள்ளது என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News