புதுடெல்லி: வெல்லம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்துவது பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் வெல்லம் சாப்பிடுவது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல வகையான நோய்களிலிருந்தும் விடுபடுகிறது. காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட்டால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருக்காது என்பது நம்பிக்கை. இது தவிர, பல வகையான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். எனவே காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
எடை கட்டுக்குள் இருக்கும்
செரிமானத்தை வலுப்படுத்த, காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இதை சாப்பிட்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, உங்கள் செரிமானமும் வலுவடைகிறது. அதாவது வெல்லம் சாப்பிடுவதால் வயிற்றில் ஏற்படும் எந்த வித அஜீரண பிரச்சனையும் நீங்கும்.
மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்
இரும்புச்சத்து குறைபாட்டை போக்க, வெல்லம் சாப்பிட வேண்டும். வெல்லத்தில் இரும்பு, ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, இது உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களை கட்டுக்குள் வைக்க உதவும்.
மூட்டு வலிக்கு உதவுகிறது
இது தவிர மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில் வெல்லம் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலியால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். காலையில் வெல்லம் சாப்பிடுவது உடல் மற்றும் எலும்பு அமைப்புகளை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.
இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வெல்லத்தில் பொட்டாசியம் மற்றும் சோடியம் இருப்பதாக நம்பப்படுகிறது. உடலில் அமிலத்தை குறைக்கும் திறன் கொண்டது. அதாவது, காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இன்றே உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR