சட்டுபுட்டுனு தொப்பை கொழுப்பை குறைக்க... மஞ்சளை இப்படி சாப்பிடுங்க போதும்

Weight Loss Tips: சில எளிய வழிகளிலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 4, 2024, 08:20 PM IST
  • மஞ்சளில் ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் உள்ளன.
  • இவை பல்வேறு நோய்களை குணமாக்கவும் அவற்றிலிருந்து நம்மை காக்கவும் உதவுகின்றன.
  • சரியான முறையில் மஞ்சளை உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
சட்டுபுட்டுனு தொப்பை கொழுப்பை குறைக்க... மஞ்சளை இப்படி சாப்பிடுங்க போதும்

Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பலருக்கு உள்ள ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நமது எடை அதிகரிக்கின்றது. எடை அதிகரித்து விட்டால் அதன் பிறகு அதை குறைப்பது ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கின்றது. 

Add Zee News as a Preferred Source

அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க (Weight Loss) மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பலர் பலவித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய வழிகளிலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

சமையலறை மசாலாக்கள்

நம் இந்திய சமையலறைகளில் பலவித மசாலாக்களில் பயன்படுத்துகிறோம். இந்த மசாலாக்கள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக அளவிலான நன்மைகளை அளிக்கின்றனர். இவற்றின் மூலம் நம் உடல் எடையையும் குறைக்க முடியும். உடல் எடையை குறைக்கும் ஆற்றல் மிக்க மசாலாக்களில் மஞ்சளும் ஒன்று.

மஞ்சள் என்னும் பொக்கிஷம்

நமது சமையலில் பெரும்பாலான உணவு வகைகளில் மஞ்சளை நாம் பயன்படுத்துகிறோம். மஞ்சள் நமது உணவு வகைகளுக்கு அழகான நிறத்தை அளிப்பதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது தவிர உடல் எடை குறைப்பதிலும் மஞ்சளின் பங்கு அதிகமாக உள்ளது. 

உடல் எடையை குறைக்க மஞ்சளை பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்

மஞ்சளும் இஞ்சியும்

உடல் எடையை குறைக்க மஞ்சளை இஞ்சியுடன் (Ginger) சேர்த்து உட்கொள்ளலாம். இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதை உட்கொள்ள ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு இன்ச் இஞ்சி மற்றும் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதன் பிறகு இதை வடிகட்டி அருந்தலாம்.

எடை இழப்புக்கு மஞ்சள் நீர்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் (Turmeric Water) குடிப்பதால் வளர்ச்சிதை மாற்றம் மேம்படுகிறது. இதனால் நம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பும் விரைவாக குறையும். இதைச் செய்ய ஒரு கிளாஸ் தண்ணீரில் மஞ்சள் துண்டுகளை போட்டு கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு பாதியானதுடன் அதை ஒரு கப்பில் வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் இதில் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இதன் மூலம் படிப்படியாக உடல் எடை குறையும்.

எடை இழப்புக்கு மஞ்சள் பால்

வேகமாக எடையை இழக்க விரும்புபவர்கள் மஞ்சள் பால் (Turmeric Milk) குடிக்கலாம். இதை செய்ய ஒரு டம்ளர் சூடான பாலை எடுத்துக் கொள்ளவும். இதில் போன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தினம் இரவு தூங்கும் முன் இதை குடிப்பதால் உடல் எடை குறையும். இது மட்டுமின்றி இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் நல்ல உறக்கமும் கிடைக்கும்.

மேலும் படிக்க | Cervical Cancer: கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் இவைதான்!

மஞ்சளும் தேனும்

மஞ்சள் மற்றும் தேனின் (Honey) கலவையும் உடல் எடை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து உட்கொள்ளவும். அல்லது இதற்கு பதிலாக தண்ணீரில் தேனும் மஞ்சளும் கலந்தும் சாப்பிடலாம்.

மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை

தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைப்பதில் இலவங்கப்பட்டை (Cinnamon) மஞ்சள் கலவை மிகவும் உதவியாக இருக்கும். இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதை செய்ய ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கவும். இதில் ஒரு இலவங்கப்பட்டையை சேர்த்து ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதன் பின்னர் அதை வடிகட்டி குடிக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிப்பதால் தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.

மஞ்சள் உட்கொள்வதால் கிடைக்கும் பிற நன்மைகள்

மஞ்சளில் ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் உள்ளன. இவை பல்வேறு நோய்களை குணமாக்கவும் அவற்றிலிருந்து நம்மை காக்கவும் நமக்கு உதவுகின்றன. சரியான முறையில் மஞ்சளை உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் முதல் நீரிழிவு நோய் வரை பல நோய்களுக்கு மஞ்சள் மூலம் தீர்வு கிடைக்கும். மஞ்சளில் பலவித ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களும் உள்ளன. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Bone Health: இதையெல்லாம் ரொம்ப சாப்பிடாதீங்க... எலும்பு வீக் ஆயிடும் எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News