புதுடெல்லி: எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட என்ன சாப்பிடுகிறோம் என்பதை சரியாக தெரிந்து உணவு உண்பதுதான், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ உதவும். ஆரோக்கியம் என்பது நோய் இல்லாத வாழ்வு என்றே பலர் நினைக்கின்றனர். நோயால் பாதிக்கப்படவில்லை என்றால் மட்டுமே நீண்ட நாட்கள் வாழ முடியுமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். சத்தான உணவுகள், உடற்பயிற்சி ஆகியவை நீண்ட ஆயுளுடன் தொடர்புடையவை. உண்மையில் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லை, மாறாக நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பற்றியே கவலைப்பட வேண்டும். கட்டுப்பாடான உணவு மற்றும் விலையுயர்ந்த சப்ளிமெண்ட்ஸ் ஆயுட்காலத்தை மேம்படுத்தாது என்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் தொடர்பாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
நீண்ட ஆயுளுடன் வாழ இந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுப் பொருட்களை உங்கள் தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை உடல் மற்றும் உறுப்புகளின் சிறந்த செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சோயா, தேநீர் மற்றும் காய்கறிகள்
புதிய இரத்த நாளங்களை உருவாக்கும் உடலின் திறன், காயங்களை குணப்படுத்துவதற்கும், இருதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரத்த விநியோகத்தை மீட்டெடுப்பதற்கும் முக்கியமானது. ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க, புதிய இரத்த நாளங்கள் உருவாவது அவசியம். நாம் உயிருடன் இருக்கும் வரை உடல் சீராக இயங்குவதை உறுதி செய்ய சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசியம். இதன் மூலம் நீண்ட ஆயுளை அதிகரிக்கலாம்.
சோயா, கருப்பு ராஸ்பெர்ரி, தக்காளி, தேநீர், மாதுளை, அதிமதுரம், பீர் மற்றும் சீஸ் போன்றவை புற்றுநோயைத் தடுக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும் மிகவும் பயனுள்ள உணவுகள் ஆகும்.
ஆசிய மக்களின் உணவில் சோயா, காய்கறிகள் மற்றும் தேநீர் போன்றவை அதிகமாக இருப்பதாலேயே அவர்களுக்கு மார்பக மற்றும் பிற புற்றுநோய்கள் உருவாகும் அபாயம் கணிசமாகக் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!
ஸ்டெம் செல்களை மீண்டும் உருவாக்க உதவும் மீன் மற்றும் ஃபிளாவனாய்டுகள்
உடலின் ஸ்டெம் செல்களின் முக்கிய வேலை திசுக்களை சரிசெய்தல், மீளுருவாக்கம் செய்தல் மற்றும் பராமரிப்பதாகும். அவை உறுப்புகள், எலும்பு மஜ்ஜை, கல்லீரல், நுரையீரல் மற்றும் குடல் ஆகியவற்றில் வாழ்கின்றன. நாம் உண்ணும் உணவுகளால் அவற்றின் செயல்திறன் பாதிக்கப்படலாம்.
கொழுப்பு நிறைந்த மீன் மீளுருவாக்கம் செய்ய உதவும் மிகவும் சக்திவாய்ந்த உணவுகளில் ஒன்றாகும். மீன் எண்ணெய் நிறைந்த உணவு, ஆக்ஸிஜன் இல்லாத தசைகளில் சிறந்த சுழற்சியுடன் இணைக்கப்பட்ட ஸ்டெம் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிரூபிக்கிறது.
ஃபிளாவனாய்டு நிறைந்த டார்க் சாக்லேட், பிளாக் டீ, பீர், ரெட் ஒயின், மாம்பழம் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை மீளுருவாக்கம் தூண்டும் உணவுகள் ஆகும்.
டிஎன்ஏவைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகள்
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, டிஎன்ஏவின் ஆரோக்கியத்தை சரிசெய்து பராமரிக்கும் உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதற்கு வைட்டமின்கள் ஏ, சி, டி, ஈ, பீட்டா கரோட்டின், லைகோபீன், லுடீன் மற்றும் செலினியம் போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட ஊட்டச்சத்துக்கள் தேவை.
இந்த ஊட்டச்சத்துக்கள், கீரை, காலே மற்றும் பிற இலை கீரைகள், வாழைக்காய், கேரட், ப்ரோக்கோலி, ஆரஞ்சு, பெர்ரி, சிவப்பு மிளகுத்தூள், பருப்பு, கடற்பாசி, முட்டை, மத்தி, பாதாம், ஆளிவிதை, பூசணி விதைகள், காபி, தேநீர், சோயா மற்றும் மஞ்சள் போன்ற மசாலாக்களில் உள்ளது.
மேலும் படிக்க | சிறுநீரகத்தை நச்சில்லாமல் வைத்திருக்கும் 3 பானங்கள்
நுண்ணுயிரிகளை அதிகரிக்கும் புளித்த உணவு
நீண்ட ஆயுளைப் பராமரிக்க ஆரோக்கியமான நுண்ணுயிரியை உறுதி செய்வது முக்கியம். நுண்ணுயிரியை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை அறிவதோடு, அதன் செயல்பாடுகளை சீர்குலைக்க என்ன சாப்பிடக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது உணவில், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பு போன்ற உணவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நுண்ணுயிர்கள், குடலில் உள்ள பாக்டீரியாக்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கிவி, புளிப்பு நிறைந்த பழங்கள், டார்க் சாக்லேட், நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ், கொத்தவரங்காய், தயிர் மற்றும் போன்றவை உடலை நீண்ட நாட்கள் வரை ஆரோக்கியமாக வைத்து ஆயுளை கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் அருமையான வழிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ