Foods To Avoid With Chicken: சிக்கன் விரும்பியாக இருந்தால், அவற்றுடன் ஒருபோதும் சாப்பிடக்கூடாத உணவுகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், கோழி அசைவ உணவுடன் சாப்பிடும் சில உணவுகள் ஆரோக்கியதற்கு மோசமான விளைவுகள் ஏற்படுத்தும். சிக்கன் சாப்பிடும்போது எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
பால் - கோழி
கோழியை பாலுடன் சாப்பிடுவது விஷத்து நிகரானது. பாலும் கோழியும் சேர்ந்து உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் ஒவ்வாமை ஏற்படலாம். பாலையும் கோழிக்கறியையும் சேர்த்து சாப்பிடுவதும் சரும பிரச்சனைகளை உண்டாக்கும். கோழிக்கறியுடன் பால் சாப்பிடுவதால் பலருக்கு சொறி, வெள்ளைப்புள்ளிகள், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் படிக்க | Diabetic Diet: இவற்றை உணவில் சேருங்கள், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
கோழி மற்றும் தயிர்
பலர் எல்லாவற்றிலும் தயிர் சேர்த்து சாப்பிடுவார்கள். தயிர் எல்லாவற்றின் சுவையையும் அதிகரிக்கிறது, மேலும் இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். சிலர் சிக்கனுடன் தயிரையும் சாப்பிடுவார்கள். தயிரின் விளைவு குளிர்ச்சியாகவும், கோழியின் விளைவு சூடாகவும் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கோழி மற்றும் தயிர் ஒன்றாக சாப்பிடுவது செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். சிக்கன் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மீன் மற்றும் கோழி
சிக்கனுடன் மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கோழி மற்றும் மீன் இரண்டிலும் புரதம் நிறைந்துள்ளது, ஆனால் இரண்டிலும் வெவ்வேறு வகையான புரதங்கள் காணப்படுகின்றன. இந்த புரதம் உடலில் வினைபுரியும். இதனால், உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், சிக்கன் மற்றும் மீனை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தேன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR