Double Chin பிரச்சனையால் முக அழகு கெடுகிறதா? தீர்வு காண டிப்ஸ் இதோ

டபுள் சின் பிரச்சனையால் நம் முகத்தின் அழகு கெட்டு விடுகிறது. அதிலிருந்து விடுபட நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2021, 01:57 PM IST
  • நம்மில் பலருக்கு முகத்தில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துகொள்கிறது.
  • தாடைப்பகுதிக்கு கீழ் தேவையற்ற கொழுப்பு உருவாகிறது.
  • சில யோகாசனங்களை செய்து வந்தால் முகத்தில் உள்ள கொழுப்பை போக்கலாம்.
Double Chin பிரச்சனையால் முக அழகு கெடுகிறதா? தீர்வு காண டிப்ஸ் இதோ title=

Remedy for Double Chin Problem: நம்மில் பலருக்கு முகத்தில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துகொள்கிறது. உடல் முழுவதும் கச்சிதமாக இருந்தாலும், முகத்தில், தாடைப்பகுதிக்கு கீழ் தேவையற்ற கொழுப்பு உருவாகிறது. இது டபுள் சின் என அழைக்கப்படுகிறது.

டபுள் சின் பிரச்சனையால் நம் முகத்தின் அழகு கெட்டு விடுகிறது. அதிலிருந்து விடுபட நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால் இவற்றால் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தெரிவதில்லை. 

எனினும், முகத்தின் தசைகளை (Facial Muscles) செயல்படுத்தி அவற்றை ஒழுங்கு செய்ய பல யோகாசனங்கள் உள்ளன. இந்த யோகாசனங்களை செய்து வந்தால் முகத்தில் உள்ள கொழுப்பை போக்கலாம். இந்த யோகாசனங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வானத்தை முத்தமிடும் யோகாசனம்: இந்த எளிய உடற்பயிற்சி உங்கள் தாடைக்கு சிறந்த தோற்றத்தை அளிக்கவும், டபுள் சின்னை அகற்றவும் உதவும். இதை செய்ய, வசதியாக அமர்ந்து, மெதுவாக வானத்தை நோக்கிப் பார்க்கவும். இதற்குப் பிறகு, நீங்கள் வானத்தை முத்தமிட முயற்சிப்பது போல் உங்கள் உதடுகளை குவிக்கவும். இந்தப் பயிற்சியை இரண்டு மூன்று நிமிடங்கள் செய்து பின்னர் ரிலாக்ஸ் செய்யவும். 

சஹஜ் கண்ட் பாவாசனம்: இந்த யோகாசனம் (Yogasan) மிகவும் எளிமையானது. யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம். கழுத்தை மெதுவாக சுழற்றி இந்த யோகாசனத்தை தொடங்க வேண்டும். முதலில், கன்னத்தை இடது தோள்பட்டை நோக்கி நகர்த்தவும், பின்னர் மூச்சை மெதுவாக வெளியேற்றி, இதை பின்னோக்கி எடுத்துச் செல்லவும். 

ALSO READ | Migraine: ஒற்றைத் தலைவலியை ஓரம் கட்ட சூப்பரான வீட்டு வைத்தியங்கள் இதோ 

இப்போது மூச்சை வெளியேற்றியபடியே கன்னத்தை வலது தோள்பட்டை நோக்கி கொண்டு வந்து மெதுவாக மார்பை நோக்கி நகர்த்தவும். அதே நிலையில், இப்போது உங்கள் கழுத்தை 3 முறை கடிகாரத்தின் முள் பயணிக்கும் திசையிலும், மூன்று முறை அதற்கு எதிரான திசையிலும் சுழற்றுங்கள். இதை தினமும் 3 முதல் 4 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

சிங்க முத்திரை: இந்த ஆசனம் மன அழுத்தத்திலிருந்து (Pressure) முக தசைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதை செய்ய, உங்கள் நாக்கை வெளியே வைத்து, முடிந்தவரை வாயைத் திறந்து விரிக்கவும். இந்த நிலையில் 30 விநாடிகளுக்கு இருக்க வேண்டும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகள் மற்றும் அவற்றின் வழிமுறைகளை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. இவற்றை பரிந்துரைகளாக மட்டுமே எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இவற்றை செய்து பார்ப்பதற்கு முன்னர் ஒரு முறை உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.) 

ALSO READ | Climbing Stairs: மாரடைப்பை தடுக்க நாள் தோறும் படியேறுங்கள்..!!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News