Hair Wash Tips in Tamil: ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான தலைமுடி அமைப்பு இருக்கும். ஒரு வாரத்தில் எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைப்பொறுத்து மாறும். ஆண்களைவிட பெண்கள் தங்கள் தலைமுடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒவ்வொருவரும் தலைக்கு எப்போது குளிக்க வேண்டும் என்று அட்டவணை போட்டு வைத்திருப்பார்கள். பெரும்பாலும் பெண்கள் முடியை காய வைப்பது சிரமம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை தலைக்கு குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இருப்பினும், சில முடி வகைகள் மற்றும் அமைப்புகளுக்கு அடிக்கடி சுத்தம் செய்வது தேவைப்படுகிறது. முடியில் அதிகம் அழுக்கு படிந்தால் பின்னாளில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | குழந்தைகளை நல்லவர்களாக மாற்றுவது எப்படி? ‘இதை’ சொல்லிக்கொடுங்கள்!
அடிக்கடி தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தால் தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை சீர்குலைக்கும். பலரது கருத்துக்களுக்கு இணங்காமல் உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு தேவையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் முடி வளர்ச்சியை அதிகரித்து முடி கொட்டுவதை தவிர்க்கலாம். மெல்லிய முடி கொண்டவர்கள் தினசரி தலைக்கு குளிப்பது நல்லது. ஏனெனில், மற்ற முடி அமைப்புகளுடன் ஒப்பிடும்போது மெல்லிய கூந்தல் உள்ளவர்கள் அதிக முடி அடர்த்தியைக் கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு தலையில் அதிக எண்ணெய் சுரப்பிகள் உருவாகின்றன. இதனால் தலைமுடி எண்ணெய் மிக்கதாக மாறுகிறது. எனவே, மெல்லிய முடி உள்ளவர்களுக்கு உச்சந்தலையில் இருந்து சருமத்தை அகற்றுவதற்கு தினசரி குளிப்பது நல்லது.
நம் உடலின் எந்தப் பகுதியையும் அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். நம் முகம் மற்றும் உடலில் உள்ள தோலைப் போலவே, உச்சந்தலையிலும் அழுக்கு, இறந்த சரும செல்கள், வியர்வை போன்றவை படிகின்றன. இது நீண்ட நாட்களுக்கு படிந்தால் முடிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியமான முடியை பராமரிக்க தொடர்ந்து தலைமுடியை சுத்தம் செய்ய வேண்டும். ஆரோக்கியமான உச்சந்தலை ஆரோக்கியமான முடிக்கு முக்கியமாகும். மெல்லிய முடியை கொண்டவர்கள் அதற்கு ஏற்றவாறு ஷாம்பூ தேர்வு செய்வது நல்லது. தடிமனான அல்லது சுருட்டை முடி கொண்டவர்களுக்கு வேர்களில் எண்ணெய் தன்மையை வெளிப்படுத்துகிறது.
இந்தவகை முடியை கொண்டவர்கள் ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தும் ஷாம்பூவை தேர்வு செய்ய வேண்டும். இவை முடியின் வேர்களை திறம்பட சுத்தப்படுத்துகின்றன, அதே நேரத்தில் முனைகளை ஈரப்பதமாக்குகின்றன. இந்த வகை முடி கொண்டவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிப்பது நல்லது. மேலும் அடர்த்தியான முடி கொண்டவர்கள் உலர்ந்த முனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இந்த முடி அமைப்பை கொண்டவர்களின் தலைமுடி நீண்ட காலத்திற்கு க்ரீஸாக மாறாது. அடர்த்தியான முடியை பராமரிக்க, மாய்ஸ்சரைசிங் கொண்ட தயாரிப்புகளை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அடர்த்தியான முடியை கொண்டவர்கள், வாரத்திற்கு நான்கு முறை தலைக்கு குளிப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க ஆசையா.. இந்த 5 ஆரோக்கியமான பானங்களை குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ