குண்டாக இருந்தாலும் தொப்பை தெரியாமல் புடவை கட்டலாம்! எப்படி தெரியுமா?

How To Look Lean In Saree : நம்மில் பலர், குண்டாக இருந்தாலும், புடவையில் ஒல்லியாக தெரிய வேண்டுமென நினைப்போம். அதற்கு சில ட்ரிக்ஸ் இருக்கிறது. அவை என்ன தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Dec 16, 2024, 04:26 PM IST
  • குண்டாக இருந்தாலும் ஒல்லியாக தெரிவது எப்படி?
  • புடவையில் எப்படி அப்படி கட்டுவது?
  • மெல்லிய இடை தெரிவது எப்படி?
குண்டாக இருந்தாலும் தொப்பை தெரியாமல் புடவை கட்டலாம்! எப்படி தெரியுமா?  title=

How To Look Lean In Saree : பெரும்பாலான இந்திய பெண்களுக்கு பிடித்த ஆடையாக இருக்கிறது, புடவை. குழந்தையாக இருக்கும் போதிலிருந்து புடவை கட்ட ஆசைப்படும் பெண்கள் பலர், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு வந்த பின்பு புடவை கட்ட தொடங்குகின்றனர். உடல் எடை கூடியிருக்கும் பலருக்கும் தாங்கள் புடவை கட்டினாலும், தொப்பை தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது இடை மெல்லியதாக தெரிய வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு சில எளிய ட்ரிக்ஸ் இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? 

சரியான துணியை தேர்ந்தெடுக்க வேண்டும்: 

ஆள் பாதி-ஆடை பாதி என்று கூறுவார்கள். இது ஒரு வகையில் உண்மை என்பதை நாம் பல இடங்களில் உணர்ந்திருப்போம். அப்படித்தான், நாம் கட்டும் புடவையை, துணியை வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான வகை துணியை தேர்ந்தெடுத்து புடவை கட்டினால், நாமும் ஒல்லியாக தெரியலாம். 

மூச்சு விட எளிதாக இருக்கும், மெல்லிய ரக புடவையினை கட்ட வேண்டும். காட்டன், சில்க் மற்றும் ஜார்ஜெட் ரக புடவைகளை அனிய வேண்டும். திக் ஆகவும், பார்க்கவே கணமாகவும் இருக்கும் ஆடைகளை கட்டக்கூடாது. 

சரியான நிறங்கள்:

பலர், ஒருவர் எந்த நிறத்தில் இருக்கிறாரோ, அதற்கு ஏற்ற நிறத்தில் இருக்கும் ஆடைகளை அணிய வேண்டும் எனக்கூறி கேள்வி பட்டிருப்போம். ஆனால், ஒருவரின் உடல் வாகுக்கு எந்த ரக புடவையின் நிறம் சரியாக இருக்கும் என்றும், ஒரு வகை இருக்கிறது. கொஞ்சம் உடல் எடை கூடியிருப்பவர்கள், ஆழ்கடல் நிறம் கொண்ட (Navy Blue), கருப்பு, டார்க் ப்ரவுன் உள்ளிட்ட நிறங்கள் கொண்ட புடவைகளை அணியலாம். இது, புடவை கட்டியிருப்பவரின் இடையை மெல்லியதாக காண்பிப்பதுடன் அவர்களை ஒல்லியாகவும் காண்பிக்கும். இதில் ப்ரிண்ட் வைத்த மற்றும் எம்ராய்டரி போட்ட டிசைன் வைத்த புடவைகளை அணிந்தால் இன்னும் ஒல்லியாக காண்பிக்கும்.

சரியான பிளவுஸ்:

நாம் உடுத்தும் புடவைக்கு, சரியான ரவிக்கை உடுத்துவதும் மிகவும் அவசியம். கைக்கு பொருந்தி போகக்கூடிய பிளவுஸை அணிய வேண்டும். இது, உங்களுக்கு மிகவும் தொளதொளவெனவும் இருக்க கூடாது. மூச்சு விட முடியாத படி மிகவும் இறுக்கமாகவும் இருக்க கூடாது. உங்கள் இடுப்பு, மார்பு பகுதி, கைப்பகுதி என அனைத்து பகுதிகளும் சரியாக அந்த பிளவுஸில் பொருந்தும் படி இருக்க வேண்டும். இது, உங்கள் இடை மற்றும் முன்பகுதியை ஒல்லியாக காட்டுவதற்கு உதவும். 

மேலும் படிக்க | புது வருடத்தை கொண்டாட 5 சரியான சுற்றுலா தலங்கள்!! உடனே Bag-ஐ பேக் பண்ணுங்க..

அதிக வேலைபாடுகள் நிறைந்த புடவைகளை தவிர்க்கவும்:

உங்கள் புடவையில் அதிக வேலைபாடுகள் இருந்தால் அது சிறப்புதான். ஆனால், பல சமயங்களில் அதுவே உங்களை பெரிதாக காண்பித்து விடும். உங்கள் எடையையும், உங்களையும் ஒல்லியாக காண்பிக்க அதிக ஜரிகை வைத்த புடவைகளை கட்டுவதை தவிர்க்கவும். அதே போல, முழுக்க முழுக்க ப்ரிண்ட் நிறைந்த புடவைகளையோ, உடுத்துவதற்கே அதிக எடையிருக்கும் புடவையை  உடுத்த வேண்டாம். 

செங்குத்து அச்சுகள் நிறைந்த புடவைகள்:

சில புடவைகளில் செங்குத்தான அச்சுகள் நிறைந்திருக்கும். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்து உடுத்தும் போது அது போன்ற புடவைகளை கட்ட வேண்டும். இவை, நீங்கள் கொஞ்சம் உயரமாக இருப்பது போன்ற தோற்றத்தை கொடுத்து, நீங்கள் ஒல்லியாக இருக்கும் தோற்றத்தை அளிக்கும். இதனால் இடையும் மெலிதாக தெரியும். 

மேலும் படிக்க | தொப்பை தெரியாமல் ஆடை அணிவது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News