வெள்ளைப்படுதல் பிரச்சனை: இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்

Home Remedies for White Discharge: வெள்ளைப்படுதலால் பெண்கள் உடல் ரீதியாக பல வித பிரச்சனகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இந்த பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2022, 01:06 PM IST
  • அதிகப்படியான வெள்ளைப்படுதல் உங்கள் உட்புற உடல் பாகங்களில் தொற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
  • மாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்பு அல்லது எப்போதாவது வெள்ளைப்படுதல் இருந்தால், அது இயல்பானது.
  • எனினும், இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு அதன் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் சில தொற்றுநோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
வெள்ளைப்படுதல் பிரச்சனை: இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும் title=

வெள்ளைப்படுதலுக்கான வைத்தியம்: பொதுவாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும். ஆனால் அது அதிகமாக இருக்கும் பெண்களுக்கு அதனால் பிரச்சனை உண்டாகலாம். இதற்கு நீங்கள் உட்கொள்ளும் உணவு ஒரு காரணமாக இருக்கலாம். ஆகையால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான பரிசோதனை செய்து உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வெள்ளைப்படுதலால் பெண்கள் உடல் ரீதியாக பல வித பிரச்சனகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. 

அரிப்பு, எரியும் உணர்வு, முதுகில் வலி மற்றும் உடலில் விறைப்பு போன்றவை இதன் காரணமாக வரும் சில பிரச்சனைகளாகும். இந்த பிரச்சனை பொதுவாக மாதவிடாய் முன் ஏற்படுகிறது. எனினும், தினசரி அடிப்படையில் இத்தகைய பிரச்சினைகள் இருந்தால், உடனே ஒரு முறை மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். இந்த பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

வெள்ளைப்படுதலுக்கான காரணம் என்ன? 

- அதிகப்படியான வெள்ளைப்படுதல் உங்கள் உட்புற உடல் பாகங்களில் தொற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். 

- மாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்பு அல்லது எப்போதாவது வெள்ளைப்படுதல் இருந்தால், அது இயல்பானது. 

- எனினும், இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு அதன் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் சில தொற்றுநோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

மேலும் படிக்க | சிறுநீரக கல் பிரச்சனையை நீங்கள் இப்படியும் தவிர்க்கலாம்! 

வெள்ளைப்படுதலுக்கான வீட்டு வைத்தியங்கள்:

- இந்த பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே சரி செய்ய, மாதுளை சாப்பிடலாம். மாதுளை உடலின் உள் உறுப்புகளை குணப்படுத்த பெரிதும் உதவும் ஒரு பழமாகும். 

- மேலும் மாதுளை இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து கஷாயம் போல் செய்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். 

 - கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.

- கொய்யா இலை கஷாயம் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், இந்த பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

- நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு நெல்லிக்காய் (ஆம்லா) மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

- இதில் வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். 

- வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனையை சமாளிக்க நெல்லிக்காயை முழுவதுமாக சாப்பிடலாம்.

- இது உடலுக்கு நன்மை தருவது மட்டுமின்றி கண்பார்வையை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? இரத்த ஓட்டத்தில் கோளாறு, ஜாக்கிரதை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News