லேட்-ஆ தூங்குபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 25 சதவீதம் அதிகம்

Late Night Sleep Side Effects: உடலில் சர்க்காடியன் ரிதம் எனப்படும் 24 மணிநேர உள் கடிகாரம் உள்ளது. தூங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சரியான நேரத்தை நிர்ணயிக்காததால், இந்த கடிகாரம் சமநிலையற்றதாகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2021, 07:22 AM IST
லேட்-ஆ தூங்குபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 25 சதவீதம் அதிகம் title=

Late Night Sleep Side Effects: ஒரு சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm) என்பது இயற்கையான, உள் செயல்முறையாகும். இது தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு முறை மீண்டும் நிகழ்கிறது. எந்தவொரு உயிரியல் செயல்முறையையும் இது குறிக்கலாம். சர்க்காடியன் சுழற்சி பொதுவாக ஒளி மற்றும் இருண்ட, விழிப்புணர்வு மற்றும் தூக்கத்தின் காலங்களுக்கு பதிலளிக்கிறது.

புனித் ராஜ்குமார், சித்தார்த் சுக்லா போன்ற நடிகர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். சமீபத்திய ஆய்வின்படி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சரியான நேரத்தில் தூங்க வேண்டும் என்றும், உங்களுக்கான தூங்குவதற்கு சரியான நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு ம்,மனிதன் இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்க செல்ல வேண்டும் என இங்கிலாந்தின் எக்ஸிடெர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து ஆராய்ச்சியாளர் பேராசிரியர். டேவிட் பிளான்ஸ் கூறுகையில், உடலில் சர்க்காடியன் ரிதம் எனப்படும் 24 மணிநேர உள் கடிகாரம் உள்ளது. உடல் மற்றும் மன செயல்பாடுகளுக்கு இடையில் சமநிலையை உருவாக்க அவை செயல்படுகின்றன. தூங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சரியான நேரத்தை நிர்ணயிக்காததால், இந்த கடிகாரம் சமநிலையற்றதாகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இரவு 10 மணிக்கு முன் தூங்குபவர்கள் மற்றும் நள்ளிரவுக்குப் பிறகு தூங்குபவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து 25% அதிகமாக இருக்கும்.

ALSO READ |  உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்..!!

88 ஆயிரம் பேர் கண்காணிக்கப்பட்டனர்:
ஒரு தசாப்தமாக, ஒரு சாதனம் 88,000 பேரின் மணிக்கட்டில் கட்டப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து எந்த நேரத்தில் தூங்கினார்கள் என்பது கண்காணிக்கப்பட்டது. முதல் ஐந்தாண்டுகளில் 3172 பேருக்கு இதயப் பிரச்சனைகள் கண்டறியப்பட்டன. மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தன.

தாமதமாக தூங்குபவர்கள் ஏன் அதிக ஆபத்து?
சரியான நேரத்தில் தூங்காததால், ஒரு நபர் அதிகாலை வெளிச்சத்துடன் தொடர்பு கொள்ள முடியாது. இதனால் இயற்கையான, உள் செயல்முறை கடிகாரம் சுழற்சியை ஒழுங்குபடுத்தாது. எனவே 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியமான ஒன்றாகும். 

சர்க்காடியன் ரிதம் தூக்கக் கோளாறு அறிகுறிகள்:
தூக்கமின்மை
அதிக தூக்கம்
சர்க்காடியன் அசாதாரணங்கள்
சோர்வு
உடல்சோர்வு
மனநிலை கோளாறு
இரைப்பை குடல் பிரச்சினைகள்
லிபிடோ குறைக்கப்பட்டது
மாற்றப்பட்ட பசியின்மை
சர்க்காடியன் ரிதம் தூக்கக் கோளாறு, ஒரு நோயாளியின் உடலில் எவ்வித உடல்ரீதியான அறிகுறிகளையும் தாராமலும்கூட இருக்கலாம்.

ALSO READ |  பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News