கொஞ்சம் சிரிங்க பாஸ்!! சிரிப்பே சிகிச்சை - சிரிப்பால் ஏற்படும் நன்மைகள் -!!

‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ என்று கூறுவார்கள். அது முற்றிலும் உண்மை. சிரிப்பால் நமக்கு பலவித நன்மைகள் கிடைக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2020, 05:32 PM IST
  • நாம் சிரிக்கும் போது ரத்த அழுத்தம் சீராகி, நமது உடலும் மனமும் அமைதி அடைகிறது.
  • சிரிப்பு ஒரு சிறந்த கார்டியோ வொர்க் அவுட்டாகும்.
  • எண்டோர்பின்கள் நம் உடலின் இயற்கையான வலி நிவாரணிகள்.
கொஞ்சம் சிரிங்க பாஸ்!! சிரிப்பே சிகிச்சை - சிரிப்பால் ஏற்படும் நன்மைகள் -!! title=

நம் வாழ்க்கையில், மனிதர்களாகிய நாம் பல வித உணர்வுகளை அனுபவிக்கிறோம். மகிழ்ச்சி, துக்கம், சினம், அச்சம் என நாம் உணர்ச்சிக்கடலில் மூழ்கிக்கிடக்கிறோம். அவற்றில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருப்பது சிரிப்பு (Laughter). ‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ என்று கூறுவார்கள். அது முற்றிலும் உண்மை. சிரிப்பால் நமக்கு பலவித நன்மைகள் (Health Benefits) கிடைக்கின்றன. நம்மை வாட்டும் பலவித நோய்களையும் (diseases) உடல்நலக்குறைவுகளையும் நாம் சிரித்து சரி செய்து கொள்ளலாம். 

இரத்த அழுத்தத்தைக் (Blood Pressure) குறைப்பதில் நமது சிரிப்பு நமக்கு கை கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருந்தால், மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வருவதற்கான சாத்தியக்கூறுகள் பெரும்பாலும் குறைக்கப்படுகின்றன. நாம் சிரிக்கும் போது ரத்த அழுத்தம் சீராகி, நமது உடலும் மனமும் அமைதி அடைகிறது.

நமது உடலில் உள்ள அழுத்தத்தின் ஹார்மோன் அளவுகளை சிரிப்பதால் குறைக்லாம். மன அழுத்த ஹார்மோன்களின் (Hormones) அளவைக் குறைப்பதன் மூலம், நம் உடலை பாதிக்கும் கவலை மற்றும் மன அழுத்தத்தை ஒரே நேரத்தில் குறைக்க முடியும். கூடுதலாக, மன அழுத்த ஹார்மோன்களைக் குறைப்பதன் மூலம் அதிக நோயெதிர்ப்பு சக்தியையும் பெற முடியும்.

சிரிப்பு நம் வயிற்றைக் குறைக்க உதவும். நாம்  சிரிக்கும்போது, நம் வயிற்று தசைகள் விரிவடைந்து சுருங்குகின்றன. உடற்பயிற்சி செய்யும் போதும் இதேதான் ஏற்படுகின்றது. சிரித்தபடியே வயிற்றைக் குறைக்க முடிந்தால், அதை விட வேறு என்ன வேண்டும்!!

சிரிப்பு ஒரு சிறந்த கார்டியோ வொர்க் அவுட்டாகும். குறிப்பாக காயங்கள் அல்லது ஏதாவது நோய் காரணமாக மற்ற உடற்பயிற்சிகளை செய்ய முடியாதவர்களுக்கு இது மிகவும் கை கொடுக்கும். ஆகவே இதயம் வலுவாக, சிரித்தால் போதும்!!

ALSO READ: Monsoon diet: மழைக்காலத்தில் கீரை மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டுமா?

டி-செல்கள் நமது உடலில் இருக்கும் சிறப்பு நோயெதிர்ப்பு அமைப்பு செல்களாகும். அவை நம் உடலில் செயல்படுத்தப்படுவதற்கு காத்திருக்கின்றன. நாம் சிரிக்கும்போது, டி-செல்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவை உடனடியாக நோயை எதிர்த்துப் போராட உதவும். அடுத்த முறை உங்கள் உடல் சோர்வாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளுடன் சிரிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

எண்டோர்பின்கள் நம் உடலின் இயற்கையான வலி நிவாரணிகள். சிரிக்கும்போது எண்டோர்பின்கள்  வெளியிடப்படுகின்றன. இது நாள்பட்ட வலியைத் தணிப்பதோடு, வலியைத் தாங்கும் சக்தியையும் தருகிறது.

பொதுவாக சிரிக்கும் போது நாம் நம்மை சுற்றி நேர்மறை அதிர்வை உணர்கிறோம். சிரிப்பு நம் ஆற்றலை அதிகரிப்பதோடு நம் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.

சிரிப்பு நம் முக அழகையும் அதிகரிக்கிறது. சிரிக்கும்போது நம் கண்களும் தாடைப் பகுதிகளும் வலுப்பெறுகின்றன.

ஆகையால், சிரிக்கவும், சிரிக்கவும், சிரித்துக்கொண்டே நீண்ட காலம் வாழவும்!!

ALSO READ: தினமும் கொஞ்சம் தேங்காய் போதும்… நெருங்கி வர அஞ்சி நோய் ஓடும்…. !!!!

Trending News