Healthy Oats: ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை உணவு. நமது அன்றாட உணவில் நால் பயன்படுத்தும் உணவுப் பொருட்களே நமது அடிப்படை ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஓட்ஸ் மிகவும் சத்தான சிறந்த தானியம்...  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2021, 04:13 PM IST

Trending Photos

Healthy Oats: ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் title=

புதுடெல்லி: ஆரோக்கியமான தானியங்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது ஓட்ஸ். மனிதர்களுக்குத் தேவையான முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் நிறைந்த ஓட்ஸ், தானியங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது

ஓட்ஸ் மற்றும் ஓட்மீல் (oatmeal) பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓட்ஸை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் பருமன் குறையும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் மற்றும் இதய நோய்கள் குறையும்.  

ஓட்ஸில் கொழுப்பு மற்றும் உப்பு குறைந்த அளவிலே உள்ளது. இயற்கையாகவே இதில் இரும்புசத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதிலுள்ள கரையக்கூடிய நார்பொருள் (பீடா குளுகான்) ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு/குடல் செயல்களை ஒழுங்கு செய்து மலச்சிக்கலை தீர்க்கிறது.  

உணவில் அதிக அளவு ஓட்ஸை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நிலையாக இருக்கும், நரம்பு சம்மந்தமான கோளாறுகள் ஏற்படாது. 

ALSO READ | உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமற்ற 5 உணவுகளின் பட்டியல்

ஓட்ஸில் உள்ள சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டிஆக்ஸிடாண்ட்ஸ்கள், வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது, அதோடு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

ஓட்ஸின் அடிப்படை வடிவமான ஓட்ஸ் க்ரோட்ஸ் சமைக்க நீண்ட நேரம் எடுக்கும். எனவே தான் பொதுவாக உருமாற்றம் செய்யப்பட்ட ஓட்ஸே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

பதப்படுத்தப்பட்ட ஓட்ஸை உடனே சமைக்கலாம். பொதுவாக காலை உணவுக்கு ஓட்ஸ் எனவே பலரும் நினைக்கிறார்கள். பாலில் வேகவைத்து கஞ்சியாக பயன்படுத்துவது, சிறந்த காலை உணவாக கருதப்படுகிறது. மஃபின்கள், கிரானோலா பார்கள், குக்கீகள் மற்றும் பிற வேகவைத்த பொருட்களிலும் ஓட்ஸ் சேர்க்கப்படுகிறது.  

ALSO READ | Chickoo Benefits: சப்போட்டா பழத்தின் நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News