பேரிக்காயின் வியக்க வைக்கும் நன்மைகள்..!!

பேரிக்காயில்  எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதுடன் மருத்துவ குணங்களும் உள்ளது. பேரிக்காயில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளதால், எடையை குறைக்க உதவுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2021, 05:34 PM IST
  • பேரிக்காயை சாப்பிட சிறந்த நேரம் காலை நேரம்.
  • உடலில் ஆற்றல் பற்றாக்குறை இருக்கும் போது பேரிக்காயை உட்கொள்ளலாம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
பேரிக்காயின் வியக்க வைக்கும் நன்மைகள்..!!   title=

Health Benefits of Pear: பேரிக்காயில்  எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதுடன் மருத்துவ குணங்களும் உள்ளது. இந்த பழம் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை அளிக்கிறது. பேரிக்காய் ஒரு பருவகால பழம். இது பார்ப்பதற்கு ஒரு பச்சை ஆப்பிள் போல் தோற்றம் கொண்டது. இதை உட்கொள்வது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். பேரிக்காயில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளதால்,  இது எடையை குறைக்க உதவுகிறது.

பேரிக்காயில் வைட்டமின்-சி, வைட்டமின்-பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின்-கே, தாதுக்கள், பொட்டாசியம், நார் சத்துக்கள், தாமிரம், மெக்னீசியம் உட்பட பல சத்துக்கள் நிறைந்து உள்ளன. இதுமட்டுமின்றி, இதில் உள்ள நார்ச்சத்து பெக்டின் வடிவத்தில் உள்ளது. இது கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்

பேரிக்காயை சாப்பிட சிறந்த நேரம் காலை நேரம்  என்று உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும். இருப்பினும், சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம், ஏனெனில் அதனால், அமிலத்தன்மை  பிரச்சனை ஏற்படலாம்.

பேரிக்காயின் அற்புதமான நன்மைகள்

1. ஹீமோகிளோபினை அதிகரிக்கிறது
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில்,  பேரிக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால்,, இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது என்றார். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பவர், அதனை தீர்க்க பேரிக்காயை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
பேரிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அதில் வைட்டமின் சி யும் அதிகம் காணப்படுகிறது, இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கிறது, பல்வேறு நோய்களுக்கு எதிராக போராடும் வலிமை உடலுக்கு கிடைக்கிறது.

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

3. உடல் ஆற்றல் பெறுகிறது
உடலில் ஆற்றல் பற்றாக்குறை இருக்கும்போது பேரிக்காயை உட்கொள்ளலாம். பேரிக்காயில் காணப்படும் சத்துக்கள் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன. இது சருமத்தையும் ஒளிரச் செய்கிறது.

4. எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்
இன்றைய காலத்தில் எடை அதிகரிப்பு ஒரு தீவிர பிரச்சனையாக மாறிவிட்டது என்கிறார் உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்.  மக்கள் அதிக உடல் எடை காரணமாக சிரமப்படுகின்றனர். பேரிக்காயில் காணப்படும் நார் சத்து மற்றும் பிற சத்துக்கள் எடையை குறைக்க பெரிதும் உதவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News