‘இந்த’ உணவை தவிர்த்தால்..ரஜினி போல நீங்களும் 74 வயதில் மாஸா இருக்கலாம்!

Rajinikanth Diet And Fitness Tips : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருவபவர், ரஜினிகாந்த். இவர், நடிப்பில் மட்டுமல்ல உடலை சரியாக வைத்துக்கொள்வதிலும் கெட்டிக்காரராக இருக்கிறார். இவரைப்போல உடலை அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Dec 19, 2024, 06:54 PM IST
  • ரஜினிகாந்த் டயட் டிப்ஸ்!
  • தவிர்க்க வேண்டிய உணவுகள்..
  • என்னென்ன தெரியுமா?
‘இந்த’ உணவை தவிர்த்தால்..ரஜினி போல நீங்களும் 74 வயதில் மாஸா இருக்கலாம்! title=

Rajinikanth Diet And Fitness Tips : நடிகர்களை பொருத்தவரை அவர்கள் எந்த வயது ஆனாலும் கேமராவிற்காகவும், தங்களின் ரசிகர்களுக்காகவும் சில விஷயங்களை செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் ஒரு வயதை கடந்து விட்டால் அவர்களுக்கும் வயதான தோற்றம் வந்துவிடும். அப்படி இப்படி தனது 70களை கடந்தும் இன்னும் கின்னென்று இருக்கும் ஒரே நடிகர்-நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். இளமை காலத்தில் ஒருவர் ஹீரோவாக நடிப்பது எளிதான காரியமாக தெரியலாம். ஆனால், 74 வயதிலும் ஒருவரால் பாடலுக்கு நடனமாட முடிகிறது, சண்டை காட்சிகளில் நடிக்க முடிகிறது, தனது எண்ட்ரியால் ரசிகர்கள் பலரை விசிலடிக்க வைக்க செய்ய முடிகிறது என்றால், அது ரஜினிகாந்தால் மட்டுமே முடியும். இவர் சமீபத்தில் தனது 74 வயதை தொட்டார். முன்னர் எந்தளவிற்கு கெட்ட பழக்கம் இருந்தததோ, இப்போது அதையெல்லாம் களைந்து வேறு ஆளாக இருக்கிறார். இவர், இப்போதும் இளமை மாறாமல் அதே துள்ளளுடன் இருக்க காரணம் என்ன? 

உடற்பயிற்சி:

ரஜினியால் பிறரைப் போல ஹெவியொக உடற்பயிற்சி செய்ய முடியாது. அதனால் சிம்பிளான யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகளை இவர் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி மனதையும் நன்றாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

தியானம்: 

தினமும் பிராணாயாம மூச்சு பயிற்சி செய்யும் போது தியானம் செய்கிறார் ரஜினி. இதனால் நுரையீரல் செயல்பாடு அதிகரித்து மூச்சு விடுவதற்கும் சிரமம் இல்லாமல் இருக்குமாம்.

ரஜினியிடம் இருந்த கெட்ட பழக்கம்!

நடிகர் ரஜினிகாந்தும் ஒரு மனிதர்தான். அவரும், தனது இளமைகாலத்தில் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்ததாக பல மேடை விழாகளில் பேசியிருக்கிறார். 

இளமைக்காலத்தில், உச்ச நட்சத்திரமாக இருந்த போது இவர் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் பிடிப்பாராம். ஒரு காலத்தில் மதுவுக்கு கூட அடிமையாகிக்கிடந்தாராம். ஆனால், ஒரு கட்டத்திற்கு பிறகு அவை அனைத்தையும் விட்டொழித்து இப்போது படங்களில் கூட அது போன்ற காட்சிகளில் பெரும்பாலும் நடிக்காமல் பார்ததுக்கொள்கிறார். 

தவிர்க்கும் உணவுகள்: 

நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே சரியான டயட்டை ஃபாலோ செய்து வருகிறார். இவரது உணவில் கண்டிப்பாக பழங்கள், காய்கறிகள், முழு தானியஞ்கள் மற்றும் மெல்லிய புரத உணவுகள் கண்டிப்பாக இருக்குமாம். அத்துடன் சேர்த்து தான் அதிகமாக சாப்பிடுவதையும் கட்டுப்படுத்திக்கொள்கிறாராம்.

உடலுக்கு ஏற்ற அளவிற்கு தண்ணீர் குடித்து, தன் உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்திருக்கும் அவர் அவ்வப்போது பழச்சாறுகள் குடிக்கவும் தவிர்ப்பதில்லை. 

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..

தவிர்க்கும் உணவுகள்!

நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டுமல்ல, இளமையாக இருக்கும் பலருக்கும் கேடு விளைவிக்கும் உணவாக இருக்கிறது, கடை உணவுகள். இதை முற்றிலும் தவிர்ப்பவர் ரஜினிகாந்த். துரித உணவுகள், சீஸ், மயோனீஸ், மாமிச கொழுப்புகள் ஆகியவற்றை ரஜினி எடுத்துக்கொள்வதே இல்லை. இது மட்டுமன்றி உப்பு மற்றும் செயற்கை இனிப்புகளை தவிர்க்கும் இவர் சுத்தமாக வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிடுகிறாராம்.

ஷூட்டிங் இல்லாத சமயங்கள்..

நம் அனைவருக்குமே வேலை இல்லாத நேரங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, தனக்கு வேலை இல்லாத சமயங்களில் ரஜினி, தனது பண்ணை வீட்டிற்கு சென்று விடுகிறாராம். அங்கு சென்று ஓய்வெடுப்பதை தனது வாடிக்கையாக்கி வைத்திருக்கிறார். 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News