தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒவ்வொரு நொடியும் அப்போது முதல்வருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் முதல்வருக்கு தெரியும் என்று ஆணையை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். புதுக்கோட்டை திமுக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.
அம்பேத்கரின் கொள்கைகளை லட்சியத்தை நிறைவேற்றுகிற அரசாக காங்கிரஸ் அரசு தான் இருந்திருக்கிறது தவிர பாஜக இல்லை, காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை மதிக்கவில்லை என்ற கருத்தை ஏற்புடையதல்ல. முதலில் சொல்லிவிட்டு பின்னர் மாற்றி திசை திருப்புவது பாஜகவுக்கு கை வந்த கலை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறி விட்டு கொல்லைப்புறம் வழியாக கெஞ்சுவதற்கான வழியாகத்தான் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தை பார்க்கிறோம். தமிழ்நாட்டில் ஐந்து முணை போட்டிகள் எல்லாம் வராது இரண்டு முனை போட்டி மட்டுமே இருக்கும், திமுக அதன் கூட்டணி கட்சிகளோடு தேர்தலை சந்தித்து தனித்து ஆட்சி அமைக்கும்.
நான் தமிழக வெற்றிக்கழத்தை சி டீம் என்ற சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை, அவர் சிலிப்பர் செல்தான், சிலிப்பர் செல்கள் மேலிட உத்தரவின் படித்தான் செயல்படுவர்கள், அம்பேத்கர் விவகாரத்தில் அவர் கருத்துக்களை கூறி இருந்தாலும் அவர் பாஜகவின் சி.டீம் தான். போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக் நிதியில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் பயன்படுத்தியுள்ளதாக அண்ணாமலையின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம் ஜாஃபர் சாதிக்கு நண்பரின் நிறுவனம் என்பது மட்டுமே உண்மை அதிலிருந்து நிதி பெறப்பட்டது என்பது ஆதாரமற்றது.
திசை திருப்புவது என்பது பாஜகவிற்கு கைவந்த கலை முதலில் அம்பேத்கர் குறித்து விரிவாக பேசிவிட்டு தற்போது அதை திசை திருப்பிக் கொண்டனர். மேலும் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை திசை திருப்புவதற்காக தான் நேற்று அம்பேத்கர் விவகாரம் பூதாகரமாக பாஜகவால் ஆக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிசிஐடி அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து அறிக்கை தாக்கல் செய்து விட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கவில்லை கோர்ட்டு உத்தரவை நாம் மதிக்க வேண்டும். இருப்பினும் சிபிஐ விசாரணையால் இந்த வழக்கு காலதாமதம் ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவில் சாத்தியமற்றது.
எங்கெங்கு எந்தெந்த நிதியை பயன்படுத்தி செலவு செய்ய வேண்டுமோ அந்தந்த நிதியை அந்தத் திட்டத்திற்கு தான் தமிழக அரசு செலவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு ஒதுக்கியுள்ள நிதியை தமிழக அரசு குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறது. அதிமுகவில் எழுச்சி என்பதே கிடையாது. மதுரை மத்திய சிறையில் ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்றது. எங்களுடைய ஆட்சி காலத்தில் எந்த ஊழல் நடைபெறவில்லை சிறை துறையில் உள்ள காவலர்கள் அனைவரும் உத்தமர்களாக இருப்பார்கள் என்று தாங்கள் கூறவில்லை. அவ்வப்போது தவறுகள் நடக்கும் அந்த தவறை நாங்கள் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தருகிறோம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்துதான் நடைபெற்றது அங்கு நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வும் நிமிடத்திற்கு நிமிடம் அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது என்று அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை வழக்கில் சாட்சிகளின் அடிப்படையில் தான் நாம் விசாரணை செய்ய வேண்டும். அதன்படி விசாரணை செய்து வருகிறோம், இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஆதாரங்கள் கண்டிப்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வேங்கை வயல் வழக்கில் எந்த அரசியல் அழுத்தமும் கிடையாது. டிஎன்ஏ பரிசோதனையில் எந்த விதமான முடிவு எட்டப்படவில்லை. ஒன்று என்னால் செய்யலாம் அந்த ஊரில் உள்ள அனைவருக்குமே டி என் எ பரிசோதனை செய்வது தான் அடுத்த கட்ட நடவடிக்கை. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவர் எங்களுடைய கூட்டணியில் தொடர்வார் தவறி சுட்டிக்காட்டுகிறார் தவிர கூட்டணியில் இருந்து விலகி விடுவதாக அவர் கூறவில்லை என்று பேட்டி அளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ