வாழ்கைக்கு தேவையான "வாழைப்பூ"வின் நன்மைகள்:

Last Updated : May 11, 2016, 11:56 AM IST
வாழ்கைக்கு தேவையான "வாழைப்பூ"வின் நன்மைகள்: title=

முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் நன்மைகள் ஏராளம். அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்திலுமே சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்போம்.

வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதன் மூலம் பெறும் நன்மைகள் ஏராளம். 

பொதுவாக வாழைப்பூவை சுத்தம் செய்ய நேரம் ஆகும் என்பதால் என்னவோ நிறைய பேர் சமைக்கமாட்டார்கள். உண்மையில் இதனை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது மிகவும் உடலுக்கு நல்லது. வாழைப்பூவை வாரம் ஒருமுறையாவது  உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், வயிறு பிரச்சனைகள், வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படும். பாலிஃபீனால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள செல்களுக்கு பாதுகாப்பு வழங்கும். இரத்ததில் சர்க்கரையின் அளவை சீராக பராமரித்து நீரிழிவை நோய்யை கட்டுப்பாட்டுகள் வைத்துக்கொள்ள உதவும். 

பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனையின் போது ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து மாதவிடாய் சுழற்சி சீராக ஏற்பட வழிவகுக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியாகவில்லை என்றால் வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் தாய்ப்பால் உற்பத்தியும் அதிகரிக்கும். இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Trending News