சைவ உணவை சாப்பிட்டே ஒல்லியாகலாம் தெரியுமா? ஆனா இந்த உணவுகளை மட்டும் சாப்பிடனும்

Food for Healthy Weight Loss: ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் உண்டால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும்? எடை இழப்பு, எடை பராமரிப்பு மற்றும் நல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உங்கள் தினசரி உணவில் புரதம் அவசியம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 1, 2023, 08:43 AM IST
  • ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் உண்டால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும்?
  • எடை இழப்புக்கு புரதச் சத்து
  • எடை பராமரிப்புக்கு சைவ உணவுகளின் அவசியம்
சைவ உணவை சாப்பிட்டே ஒல்லியாகலாம் தெரியுமா? ஆனா இந்த உணவுகளை மட்டும் சாப்பிடனும் title=

எடை இழப்பு, எடை பராமரிப்பு மற்றும் நல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உங்கள் தினசரி உணவில் புரதம் அவசியம். உயர் புரதம் கொண்ட இந்திய உணவுகளை தொடர்ந்து உண்கொண்டாலே, உடல் எடை பராமரிக்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. நாம் போதுமான புரதத்தை சாப்பிடாதது பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. போதுமான புரதம் கிடைக்காத போது நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன்கள், செரிமானம், எலும்புகள் மற்றும் சர்க்கரை அளவு மாறுதல்கள் ஏற்படுகின்றன.

ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை

 ஒரு கிலோ உடல் எடையில் குறைந்தபட்சம் 0.8-1 கிராம் புரதத்தைப் பெறுவதை இலக்காகக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணமாக 70 கிலோ எடையுள்ளவர், தினசரி 55-70 கிராம் புரதத்தைப் பெறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். இது மிகவும் எளிதானது. அதிலும் இந்திய உணவில் இருந்து போதுமான புரதத்தை பெறுவது மிகவும் சுலபமானது.

ஆனால், சைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் கொண்ட உணவுப் பொருட்களின் தேர்வுகள் குறைவாக இருக்கிறது என்பது பொதுவான நம்பிக்கை. உண்மையில், அதிக புரதம் கொண்ட சைவ உணவுகளின் பட்டியல் நீளமானது. எடை இழப்புக்கு புரதம் முக்கியமானது என்பதற்கு காரணம், புரதம் நிறைந்த உணவை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசி எடுக்காது. இதன் பொருள் பசி குறைகிறது, மேலும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உந்துதலும் சீக்கிரம் வராது. இதன் விளைவாக, உங்கள் ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளல் குறைகிறது மற்றும் எடை இழப்பு எளிதான வழியில் நிகழ்கிறது.

மேலும் படிக்க | Weight Loss: வெயிட் குறைய வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா, சீக்கிரமா எஃபக்ட் கிடைக்கும்!
 
போதுமான புரதத்தைப் பெற நீங்கள் உண்ணக்கூடிய இந்திய உணவுகளின் பட்டியல் இது. நமது அன்றாடச் செயல்பாடுகளைத் தூண்டவும், நல்ல ஆரோக்கியத்தைப் பேணவும், தசைகளை உருவாக்கவும், அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உங்களுக்கு போதுமான அளவு புரதம் தேவை. 

எடை இழப்புக்கு புரதம் நிறைந்த உணவுகள் 
சைவ உணவு உண்பவராக போதுமான புரதத்தைப் பெறுவது ஒப்பீட்டளவில் கடினமாக இருக்கலாம், ஆனால் சாத்தியமற்றது அல்ல. உங்கள் உயர் புரத இந்திய உணவு அட்டவணையில் நீங்கள் உண்ணக்கூடிய உயர் புரத சைவ விருப்பங்கள்:

  • பனீர்
  • டோஃபு / டெம்பே
  • சோயா பீன்
  • தயிர் அல்லது மோர்
  • பட்டாணி 
  • வெந்தயம்
  • முட்டை, மஞ்சள் கருவுடன்
  • பருப்பு
  • முளைகட்டிய தானியங்கள்
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • கொண்டைக்கடலை
  • கீரை வகைகள்
  • ராஜ்மா மற்றும் சுண்டல் வகைகள்
  • உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகள்

மேலே குறிப்பிட்டுள்ள உயர் புரத விருப்பங்களுடன் கூடுதலாக, எல்லா வித காய்கறிகளையும் உண்ணலாம். காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்வது அதிக புரதத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.

கொட்டைகள் மற்றும் உலர்பழங்களைப் போலவே, வேர்க்கடலையில் சில புரதம் உள்ளது, ஆனால் 5 மடங்கு கொழுப்பு உள்ளது, எனவே வேர்க்கடலையை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க இதை செய்யாதீர்கள்... 6 பக்கவிளைவுகளால் பாதிக்கப்படலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News