கொரோனா 3-வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் - நிபுணர்கள் ஆய்வு !

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே கொரோனா  3-வது அலையின் தாக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2021, 12:44 PM IST
கொரோனா 3-வது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் - நிபுணர்கள் ஆய்வு ! title=

டெல்லி:-  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே கொரோனா  3-வது அலையின் தாக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  இதில் முக்கியமாக வரும் நாட்களில் பண்டிகைகள் வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

corona

இது குறித்து தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் N.K.அரோரா பேட்டியளித்துள்ளார்.  அதில், 'வருகிற நாட்களில் விரைவான தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவின் புதிய மாறுபாடு தோன்றாத சூழலில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே 3-வது அலை அமையும்’ என்று தெரிவித்தார்.  இதைப்போல நாட்டில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

arora

இருப்பினும் வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பெரிய கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஆகியவைதான் 3-வது அலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.  முன்னதாக ஐசிஎம்ஆரின் ஆராய்ச்சி படி,கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை பயனுள்ளதாக இல்லை. உலகின் பிற பகுதிகளிலிருந்து இதே போன்ற ஆய்வுகள் இறப்பு அல்லது மருத்துவமனையில் தங்குவதை குறைப்பதில் தடுக்க முடியவில்லை. எனவே இந்த காரணங்களுக்காக, கடுமையான கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக பிளாஸ்மா சிகிச்சையை ஐசிஎம்ஆர் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News