தொப்பை கொழுப்பை கரைக்க ருசியான ஈசியான வழி: இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்

Weight Loss Tips:உடல் எடையைக் குறைக்கவும், அதிக ஆற்றலைப் பராமரிக்கவும் குளிர்காலத்தில் உங்கள் உணவுமுறையை மாற்றியமைத்து, சில குளிர்காலப் பழங்களை (Fruits) உங்கள் தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 26, 2023, 10:02 AM IST
  • ஆரஞ்சுகள் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாக உள்ளன.
  • அவை உடல் எடையை குறைக்க உதவும்.
  • பவர் டிடாக்ஸ் விதிமுறைகளில் சேர்க்க அவை ஏற்றவை.
தொப்பை கொழுப்பை கரைக்க ருசியான ஈசியான வழி: இந்த பழங்களை சாப்பிட்டால் போதும் title=

Weight Loss Tips: குளிர்காலம் வந்துவிட்டது. குளிர்காலத்தில் பெரும்பாலும் பசியும், சோம்பேறித்தனமும் அதிகரிக்கும். உடல் செயல்பாடுகள் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் மூக்கடைப்பு, இருமல், ஜலதோஷம் போன்றவையும் அடிக்கடி ஏற்படும். அது மட்டுமின்றி குளிர்காலத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும், ஏற்கனவே உள்ள வலிகளும் வீக்கங்களுன் அதிகமாகும். இந்த காலத்தில் எடையும் வேகமாக அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

இந்த காலத்தில் நாம் உட்கொள்ளும் உணவும், அவற்றின் அளவும் மாறுபடுவதால் நமது தொப்பை கொழுப்பும் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில் தொப்பை கொழுப்பை குறைத்து (Belly Fat) எடை இழப்பை வேகமாக்கும் உணவுகளில் கனவம் செலுத்தி அவற்றை நாம் உட்கொள்ள வேண்டும். இதற்கு சிலர் ஜிம் சென்று சில சிறப்பு உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவுகட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் இதை செய்யலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

எடை இழப்புக்கான பழங்கள்

உடல் எடையைக் குறைக்கவும், அதிக ஆற்றலைப் பராமரிக்கவும் குளிர்காலத்தில் உங்கள் உணவுமுறையை மாற்றியமைத்து, சில குளிர்காலப் பழங்களை (Fruits) உங்கள் தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். உங்கள் உணவில் சரியான உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் முழுமையுடனும் உற்சாகத்துடனும் இருக்க முடியும். உங்கள் உணவில் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களைப் பெறுவதற்கு ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான வழி பழங்களை உட்கொள்வதாகும். ஆரஞ்சு முதல் சீதாப்பழம் வரை, எடை இழப்பு மற்றும் செரிமானத்திற்கான சில குளிர்கால பழங்கள் பற்றி இங்கே காணலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சுகள் (Orange) வைட்டமின் சி இன் சிறந்த மூலமாக உள்ளன. மேலும் அவை உடல் எடையை குறைக்க உதவும் பவர் டிடாக்ஸ் விதிமுறைகளில் சேர்க்க ஏற்றவை. இந்த பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் கலோரிகளும் குறைவாக உள்ளன. இவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் முழுயான உணர்வுடன் வைத்திருக்கிறது. 

மாதுளை:

மாதுளையில் (Pomegranate) ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. இந்த சுவையான பழம் வொர்க்அவுட்டிற்கு முன் அல்லது பிந்தைய சிற்றுண்டிக்கு சிறந்த தேர்வாக இருக்கும். கொழுப்பின் ஒரு வடிவமான ட்ரைகிளிசரைடுகள் இந்த பழத்தால் குறைக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | யூரிக் அமிலம் அதிகமாய் இருக்கா? இரவு உணவில் இவற்றை ஒதுக்கினால் போதும்!

ஆப்பிள்

ஆப்பிள்கள் (Apple) நார்ச்சத்து அதிகம் உள்ள பல்துறை பழங்கள் ஆகும். இவை செரிமானத்தை சீர் செய்வதுடன் முழுமையான உணர்வையும் அளிக்கின்றன. பசியைப் பூர்த்தி செய்யும் அவற்றின் உள்ளார்ந்த இனிப்பு காரணமாக, எடை இழப்புக்கு முயற்சிப்பவர்களுக்கு இவை சிறந்த சிற்றுண்டி விருப்பமாக இருக்கும். இவற்றை சாலட்டில் சேர்த்தோ, ஸ்மூத்தி செய்தோ சாப்பிடலாம். 

கிவி

கிவி (Kiwi) குறைந்த கலோரிகள் மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் உணவு நார்ச்சத்து அதிகம் உள்ள ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இவை சாலடுகள் மற்றும் சிற்றுண்டிகளின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரித்து சுவையையும் கூட்டுகின்றன. 

கொய்யா:

கொய்யாவில் (Guavas) அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு திருப்தியான உணர்வை அளித்து நிரம்பிய உணர்வையும் கொடுக்கின்றது. குறைந்த சர்க்கரை அளவு கொண்ட பழுத்த கொய்யாப்பழங்கள் எடையைக் குறைக்க (Weight Loss) பெரிய அளவில் உதவுகின்றன. 

சீதாப்பழம்: 

சீதாப்பழத்தில் (Custard apple) பல உயிரியல் செயல்பாடுகளுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கூறுகள் உள்ளன. வைட்டமின்கள் ஏ மற்றும் சி தவிர, இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க செறிவுகளை இது கொண்டுள்ளது. குளிர்காலத்தில் செரிமானம் குறையும் போது பொதுவாக ஏற்படும் மலச்சிக்கலுக்கு, இந்த உணவில் உள்ள நார்ச்சத்து மூலம் நிவாரணம் பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜே.என்.1 வகை கொரோனாவுக்குத் தடுப்பூசி தேவையில்லை: மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News