How To Prevent Viral Fever: தற்போது காலநிலை மாற்றம் காரணமாக வைரல் காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. சிறிது நாட்களுக்கு நல்ல மழை, பின்னர் மீண்டும் கடும் வெயில் என்று வானிலை மாறி மாறி வருவது தான் இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். சாதாரண சீசன் காய்ச்சல் தானே என அலட்சியமாக என்ன வேண்டாம். ஏனெனில், பல நேரங்களில் அது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து விடுகிறது.
பருவமழை மற்றும் மாறும் வானிலையின் போது அதிகமாகக் காணப்படு வைரல் காய்ச்சல் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. வைரல் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல் மட்டுமல்லாது, தலைவலி, தொண்டை வலி, உடல்வலி மற்றும் அதீத சோர்வு போன்ற பிரச்சனைகளும் காணப்படுகின்றன. வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதை தவிர்க்க என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டாக்டர் இம்ரான் அகமது கூறிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
வைரல் காய்ச்சல் வராமல் தடுக்க மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல்
நெரிசலான இடங்களில் வைரல் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, பொது போக்குவரத்து, சந்தைகள் மற்றும் பிற நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். அவசியம் செல்ல வேண்டியிருந்தால், மாஸ்க் அணியுங்கள். தனி நபர் இடைவெளியை பராமரிக்கவும். இதனால் வைரஸுடன் தொடர்பு கொள்ளும் அபாயத்தைக் குறைக்கலாம்.
சுகாதாரத்தை பராமரித்தல்
வைரஸ் தொற்று சுகாதார மற்ற நிலையில் பரவுகிறது. எனவே, உடல் சுத்தத்தை பராமரிக்க வேண்டும். முக்கியமாக கைகள் மூலம் பரவும் வாய்ப்பு அதிகம். ஏனென்றால் நாள் முழுவதும் வைரஸ் இருக்கும் சாத்தியம் உள்ள பல இடங்களைத் தொட வேண்டிய சூழல் நமக்கு ஏற்படலாம். எனவே, உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவுவது மிக முக்கியம். தண்ணீர் கொண்டு கழுவும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், சானிடைசர் பயன்படுத்தவும்.
ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தல்
வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும். இதற்கு வைட்டமின் சி நிறைந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட இஞ்சி, துளசி, தேன், எலுமிச்சை போன்றவற்றையும் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
உடலை நீரேற்றம் நிறைந்ததாக வைத்திருப்பது வைரஸ் காய்ச்சலைத் தவிர்க்க உதவியாக இருக்கும். எனவே, உடலில் நீர் சத்து குறையாமல் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். நாள் முழுவதும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இது தவிர, புதிய பழச்சாறுகள் மற்றும் சூப்களை உட்கொள்வது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
நல்ல ஓய்வு
வைரல் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் முதலில் உடலுக்கு ஓய்வு கொடுங்கள். ஓய்வெடுப்பதன் மூலம், உடல் விரைவாக மீண்டு, ஆரோக்கியமாக உணர ஆரம்பிக்கிறீர்கள். நல்ல தூக்கம் தேவை. குறைந்தது 7-8 மணிநேரம் ஆழமாக தூங்குவது முக்கியம்.
மருத்துவர் ஆலோசனை பெறுதல்
காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது கடுமையான உடல் வலி போன்ற வைரல் காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது முக்கியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ