அழகையும் ஆராதித்து ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் சூப்பர் எண்ணெய்! விலையும் மலிவுதான்...

Healthy Oil Castor Oil : ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய்க்கு நிகர் வேறு எந்த எண்ணெயும் இல்லை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2024, 04:57 PM IST
  • விளக்கெண்ணெயின் மருத்துவ குணங்கள்!
  • மூட்டு வலியைப் போக்கும் எண்ணெய்
  • ஆரோக்கியமான சருமத்திற்கு விளக்கெண்ணெய் கேரண்டி
அழகையும் ஆராதித்து ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் சூப்பர் எண்ணெய்! விலையும் மலிவுதான்... title=

விளக்கெண்ணெய்  என்றாலே குளிர்ச்சியானது என்பது அனைவருக்கும் தெரியும். உடல் சூட்டை தனிப்பதில் ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய்க்கு நிகர் வேறு எந்த எண்ணெயும் இல்லை என்றே சொல்லலாம். இந்த தாவர எண்ணெய், பிற எண்ணெய்களை விட அதிக அடர்த்தியானது என்பதால் இதில் பிசுபிசுத்தன்மை அதிகம். 

பல்வேறு மருத்துவ பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் விளக்கெண்ணெயில் உள்ள ஒமேகா-9 எனும் கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகிறது. விளக்கெண்ணெய் உடல் சூட்டை குறைக்கும் என்பதால், தலைக்கு தேய்த்து வந்தால், கூந்தல் அடர்த்தியாக வளரும். உடலில் தேய்த்தால், உடலின் வறட்சி நீங்கி சருமம் ஒளிரும். 

இளம் வயதிலேயே ஏற்படும் நரை முடி பிரச்சனைக்கும் விளக்கெண்ணெய் தீர்வு தருகிறது. வாரம் இருமுறை விளக்கெண்ணெய் தேய்த்து குளித்துவந்தால், நரைமுடி பிரச்சனை முதல் முடி அடர்த்தியின்மை வரை பல பிரச்சனைகள் தீரும்.

ஆனால், தொப்புளில் விளக்கெண்ணெய் மசாஜ் செய்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. தொப்புளில் விளக்கெண்ணெய் விட்டு, மசாஜ் செய்தால் பல பிரச்சனைகள் தீரும். 

மேலும் படிக்க | தூங்கி எழுந்ததுமே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? எவ்வளவு குடித்தால் பிரச்சனை?

இன்று பலருக்கும் மூட்டு வலி, எலும்பு மஜ்ஜைகளில் வறட்சி என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு மந்திரம் போடுவது போல நல்ல நிவாரணம் அளிக்கிறது விளக்கெண்ணெய்.

இரவு படுக்கும் முன்பு விளக்கெண்ணெயை லேசாக சூடு செய்து மூட்டுப் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்தால் சரும துவாரங்கள் வழியே இறங்கி மூட்டுகளின் உராய்வைத் தடுத்து வலியைக் குறைக்க விளக்கெண்ணெய் உதவும். 

அதேபோல, தொப்புளில் சில துளி விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்து வந்தால், உடல் முழுவதும் புத்துணர்வு பெறும், வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீரும். 

மேலும் படிக்க - ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?

அழகை மேம்படுத்தவும் விளக்கெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அழகு சாதனப் பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் விளக்கெண்ணெய். வறண்ட சருமம் கொண்டவர்கள் விளக்கெண்ணெய் தேய்த்து சற்று நேரம் கழித்து பயத்த மாவு தேய்த்து கழுவினால், வறட்சி நீங்கும்.  

கண்களின் கீழ் கருவளையம் இருப்பவர்கள், விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி உள்ள கருவளையத்தின் மீது மசாஜ் செய்து வந்தால் கருவளையம் நீங்கி கண்கள் புத்துணர்வு பெறும்.

அதுமட்டுமல்ல, ஆமணக்கில் இருந்து எடுக்கும் விளக்கெண்ணெய் மட்டுமல்ல, ஆமணக்குச் செடியின் இலைகள், வேர், விதை, ஆகியவையும் சிறப்பான மருத்துவப் பண்புகளைக் கொண்டவை. வாதத்தை போக்கும் விளக்கெண்ணெய், உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியைத் தருகிறது.

ஒரு காலத்தில் விளக்கு எரிக்க பயன்படுத்தப்பட்டதால் விளக்கெண்ணெய் என்று அறியப்பட்ட விளக்கெண்ணெய், தற்போது காஸ்டர் ஆயில் என ஆங்கிலப் பெயரில் பல் நூறு ரூபாய்களுக்கு விற்பனையாகிறது. மலிவான நிலையில் எளிதாக கிடைக்கும் விளக்கெண்ணெயை பயன்படுத்துவதை வழக்கத்திற்கு கொண்டுவருவது உடல் ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் நல்லது.

மேலும் படிக்க | ஆரோக்கியத்துக்கு நல்லதா இருந்தாலும் இந்த உணவுகள் ‘உங்களுக்கு’ சரிவராது! எச்சரிக்கும் சிறுநீரகக் கல்!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News