அழகு நிலையம் செல்வதால் உங்கள் தோற்றத்தை அழகாக காட்ட முடியும் என நம்பினால் அது முற்றிலும் தவறான ஒன்று. உங்கள் உணவு பழக்கத்தில் சில உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்தையும், அழகையும் பேணி பாதுகாக்கும்.
பச்சை ஆப்பிள், இது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின்-சி வைட்டமின் K மற்றும் A உடன் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன அதிகம் இருக்கின்றன. இதனால், இந்த ஆப்பிளை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சருமத்தின் வயதான தோற்றம் குறைந்து இளமை பொலிவை பெற முடியம்.
அதேபோல் இந்த பச்சை ஆப்பிள் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நண்மை பயக்கும். இதில் உள்ள வைட்டமின் A கண்களின் பலவீனம் மற்றும் வறட்சி பிரச்சனைக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது. இதை உட்கொள்வதால் கண் பார்வையில் ஏற்படும் கோளாறுகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க | நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி?
எலும்பு ஆரோக்கியத்திற்கும், நுரையீரல் நலனுக்கும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இந்த பச்சை ஆப்பிள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை உட்கொண்டால் உடல் நலத்திற்கு அதிகப்படியான நலனை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த பச்சை ஆப்பிள் கடைகளில் விற்கப்பட்டாலும் சிவப்பு ஆப்பில் வாங்கும் ஆர்வத்தை பொதுமக்கள் பச்சை ஆப்பிள் வாங்குவதில் காண்பிப்பது இல்லை. சிவப்பு ஆப்பிள் வாங்கி பழகிய பலருக்கும் பச்சை ஆப்பிள் வாங்குவதில் தயக்கம். அதேபோல அதன் விலை சிவப்பு ஆப்பிளை விட அதிகமாக இருக்கும் என்ற தயக்கம். ஆனால் இவை இரண்டிற்கும் பெரிய அளவில் விலையில் வேறுபாடு இருக்காது. அதனால் மக்கள் பச்சை ஆப்பிளை தாராளமாக வாங்கி உண்ணலாம்.
மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR