Tamil Nadu Latest News: தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோதப் பணப்பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் கீழ் சோதனை செய்த அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. ஒரு ஆண்டுக்கு மேல் சிறையில் இருந்த அவர், தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துளர். வந்துள்ளார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜி ஜாமினுக்கு எதிராக மனு
இந்தநிலையில், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதும், அவரை உடனடியாக மீண்டும் அமைச்சரவையில் தமிழ்நாடு முதல்வர் இடம் தந்துள்ளார். இதன்மூலம் தமிழக காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வருடன் நெருங்கிய தொடர்பில் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
இதன் காரணமாக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மோசடி வழக்கு விசாரணையை நியாயமாக நடைபெறாது என்பதை காட்டுகிறது. மேலும் செந்தில் பாலாஜி வழக்கை மாநில புலனாய்வு அமைப்பு விசாரித்து வருவதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் இதில் பொருந்தாது என்றும், அரசு இயந்திரத்தின் மீதும் காவல்துறையிலும் செல்வாக்கு படைத்த மூத்த அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியால், என்னை போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யவேண்டும்
எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற்று, அவரது ஜாமீன் மேல்முறையீடு மனுவை மீண்டும் விசாரித்து உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.
வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா. மற்றும் ஏஜி மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வு, வித்யாகுமார் சார்பில் தெரிவித்த அச்சத்தை கருத்தில் கொண்டு, குறிப்பாக செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் சாட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் ஜாமீன் அளித்த மறுநாளே அமைச்சராக பதவி ஏற்றது சாட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதையும் சுட்டுக்காட்டிய நீதிபதிகள், வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் இந்த மனு மீது விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க - தமிழக அரசு வழங்கும் ரூ. 3000 உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்?
மேலும் படிக்க - தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை எழுப்பிய சரமாரி கேள்விகள்!
மேலும் படிக்க - ஜெயலலிதா என்னை படிக்க விடாமல் தடுத்தார் - கனிமொழி NVN சோமு பகீர் குற்றச்சாட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ