புதுடெல்லி: இந்திய அரசாங்க ஆதரவு பெற்ற கோவிட் -19 (COVID-19) தடுப்பு மருந்து பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளிவரக்கூடும். இந்த மருந்தின் கடைசி கட்ட சோதனைகள் இந்த மாதத்தில் தொடங்குகின்றன. ஆய்வுகள் இதுவரை இந்த மருந்து பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் தோன்றியுள்ளதாக தெரிவிக்கின்றன என்று அரசாங்கத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உடன் கோவாக்சின் உருவாக்கும் தனியார் நிறுவனமான பாரத் பயோடெக், அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தான் இதை வெளியிட முடியும் என நினைத்திருந்தது.
"தடுப்பு மருந்து நல்ல செயல்திறனைக் காட்டியுள்ளது" என்று ICMR மூத்த விஞ்ஞானி ரஜ்னி காந்த் கூறினார். இவர் கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு
"அடுத்த ஆண்டு, பிப்ரவரி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில், நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."
இது தொடர்பாக பாரத் பயோடெக்கை (Bharat Biotech) உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
பிப்ரவரியில் லாஞ்ச் செய்யப்பட்டால், கோவாக்சின் (Covaxin) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தாக பெயரெடுக்கும்.
இந்தியாவின் கொரோனா வைரஸ் (Corona Virus) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 50,201 அதிகரித்து 8.36 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போது தொற்று எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. 704 பேர் இறந்த நிலையில், இப்போது மொத்த இறப்பு எண்ணிக்கை 124,315 ஆக உள்ளது. தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளின் தினசரி உயர்வு செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்த உச்சத்திலிருந்து குறைந்துள்ளது.
ICMR-ரின் ஆராய்ச்சி மேலாண்மை, கொள்கை, திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு கலத்தின் தலைவரான காந்த், மூன்றாம் கட்ட சோதனைகள் முடிவதற்கு முன்பே மக்களுக்கு கோவாக்சின் ஷாட்களை வழங்க முடியுமா என்பதை சுகாதார அமைச்சகம் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
COVID-19 தடுப்பு மருந்துக்கு, குறிப்பாக முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பணியிடங்களில் உள்ளவர்களுக்கு அவசர அங்கீகாரம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செப்டம்பர் மாதம் தெரிவித்தார்.
பல முன்னணி தடுப்பு மருந்து நிறுவனங்கள் ஏற்கனவே இறுதி கட்ட சோதனையில் உள்ளனர். பிரிட்டனின் அஸ்ட்ராசெனெகா உருவாக்கிய ஒரு பரிசோதனை தடுப்பு மருந்து இதில் முன்னணியில் உள்ளது. டிசம்பர் பிற்பகுதியில் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதை வெளியிடலாம் என பிரிட்டன் நம்புகிறது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் அஸ்ட்ராஜெனெகா பல விநியோக மற்றும் உற்பத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR