பெரும்பாலும் உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனம், நடக்கும்போது மூச்சுத் திணறல், தலைவலி மற்றும் விரைவான இதயத் துடிப்பு ஆகியவை இருந்தால், இந்த அறிகுறிகளுக்கு உடலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருப்பது வழக்கம். இரும்புச்சத்து உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.
ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். இது நுரையீரலில் இருந்து உடல் முழுவதும் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கல் குறைகிறது. இது ஆரோக்கியத்திற்கு ஒரு தீவிரமான நிலையாக உருவெடுக்கலாம். இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அதன் அறிகுறிகள் உடலில் வெளிப்படும்.
சில பழங்கள் மற்றும் காய்கறிகள் இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்ன என்பதையும், எந்தெந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இந்த குறைபாட்டை பூர்த்தி செய்யலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:
உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். சோர்வு, பலவீனம், வெளிர் தோல், சுவாசிப்பதில் சிரமம், மயக்கம், தலைவலி, அதிகரித்த இதயத்துடிப்பு, மஞ்சள் தோல், பலவீனம், மார்பு வலி, கை கால்களில் குளிர்ச்சி, முடி உதிர்தல், வாயின் ஓரங்களில் வெடிப்பு, அதிக சோர்வு உணர்வு, பசியின்மை, தொண்டை புண் மற்றும் நாக்கில் வீக்கம் ஆகியவை இரும்புச்சத்து குறைபாட்டின் போது தெரியும் அறிகுறிகளில் சிலவாகும்.
மேலும் படிக்க | ஜிம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை: வேகவைத்த முட்டையை அதிகமா சாப்பிட்டால் ஆபத்து
இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க இந்த காய்கள் / பழங்கள் உதவும்
பீட்ரூட்:
உடலில் இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க, தினமும் ஒரு பீட்ரூட்டை உட்கொள்ளுங்கள். பீட்ரூட்டை உட்கொள்வதால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இரத்த பற்றாக்குறையை சமாளிக்க பீட்ரூட் சாப்பிடுவதை மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர்.
பசலைக்கீரை:
உடலில் இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க, கீரையை உட்கொள்ள வேண்டும். கால்சியம், சோடியம், தாது உப்புக்கள், குளோரின், பாஸ்பரஸ் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் கீரையில் இருப்பதால், உடலில் உள்ள இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்கிறது.
மாதுளம்பழம்:
மாதுளம்பழம் சாப்பிடுவது எவ்வளவு சுவையோ அதே அளவு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மாதுளை சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு சரியாகும். மாதுளம் பழச்சாறு குடிப்பதால் இரத்த சோகை போன்ற நோய்கள் நீங்கும்.
கொய்யாப்பழம்:
கொய்யாப்பழத்தை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள ரத்தப் பற்றாக்குறை நீங்கும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த கொய்யாவை சாட் செய்து சாப்பிடலாம்.
பச்சை காய்கறிகள்:
உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்க, பச்சை காய்கறிகளை சாப்பிடுங்கள். பச்சை காய்கறிகள் ஹீமோகுளோபினை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | Broccoli: உங்கள் மூளையை ஜெட் வேகத்தில் இயங்க செய்யும் ப்ரோக்கோலி ஜூஸ்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR