Fibromyalgia: தலைவலி, பல்வலி, முதுகுவலி, மூட்டுவலி, கைகால்வலி என ஏதேனும் ஒரு வலியை நாம் அனைவரும் நிச்சயம் அனுபவித்து இருப்போம். அதில் ஒன்று தான் உடம்பு வலி. இது பொதுவாக அனைவருக்கும் வரும் ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி காரணமே இல்லாமல் அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால், அது ஃபைப்ரோமியால்ஜியா என்னும் தசைநார் வலி என்னும் நோயாக இருக்கலாம். முன்பெல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்த வலி இப்போது இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது என்பதுதான் கவலை தரும் விஷயம்.
தசைநார் வலிக்கான காரணம்
தசை நார் நோயினால், ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, 20 வயதிலிருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உடலில் பல இடங்களில் பரவலாக உணரக்கூடிய வலியாக இருக்கும் இந்த நோய், எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், மரபு ரீதியாக இந்த நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஹார்மோன் மாற்றங்கள்
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தசைநார் வலி ஏற்படக் கூடும். பெண்களுக்கு செரட்டோனின் ஹார்மோன் சுரப்பு குறைந்து விடும்போதும் முழுவதுமே சுரக்காத போதும் தசைநார் வலி ஏற்படும். அதோடு, வலியை உணரச் செய்யும் சப்ஸ்டன்ஸ்-பி எனும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தில் அதிகரிக்கும்போது தசைநார் வலி தோன்றும். சிலருக்கும் உடல் ரீதியான காயம், தொற்று நோய், அறுவை சிகிச்சை, குழந்தை பேறு ஆகியவற்றின் காரணமாவோ அல்லது மிக மோசமான மன நிலை பாதிப்பின் காரணமாகவோ ஏற்படக் கூடும்.
மேலும் படிக்க | தொப்பையை கரைக்கும் உத்தான பாதாசனம்... செய்வது எப்படி!
தசைநார் வலிக்கான அறிகுறிகள்
தசைநார் வலி நோய் பாதிக்கபப்ட்டவர்களுக்கு, அதிக அளவிலான சோர்வு, தூக்கமின்மை, மூட்டுகளில் தாங்க முடியாத வலி, கடுமையான தலைவலி, எதிலும் கவனம் செலுத்து முடியாத மனநிலை போன்ற அறிகுறிகள் இருக்கும். உடலில் தசைவலி 3 மாதங்களுக்கு மேல் நீடித்தால், அது தசைநார் வலியாகத்தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
தசைநார் வலிக்கான சிகிச்சை
நோய்க்கான சிகிச்சையில், மருந்துகள் வழங்கப்பட்டாலும், உடற்பயிற்சி, மன அழுத்தத்தை நீக்கும் யோகா பயிற்சிகள், தியான பயிற்சிகள் ஆகியவை முக்கிய ப்பங்கு வகிக்கின்றன. அக்குபங்சர் சிகிச்சையும் ஆயுர்வேத மசாஜ் செய்வதும் நல்லது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.
தசைநார் வலிக்கான உணவுகள்
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவு, காய்கறி மற்றும் பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். மேலும், செரட்டோனின் சுரப்பை தூண்டும் வாழைப்பழம், பாதாம், அன்னாசி, சோயா உணவுகள் பிரச்சனைக்கு தீர்வைத் தரும். ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பது, இசை கேட்பது, ஓவியம் தீட்டுவது, தோட்ட வேலை பார்ப்பது என உங்கள் மனதிற்கு பிடித்த வேலைகளை செய்து, ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழப் பழகினால், தசைநார் வலிக்கு உடலில் இடமில்லாமல் போகும்.
மேலும் படிக்க | நீரிழிவை ஓட விரட்டும் ‘கேழ்வரகின்’ வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ