முகம் முழுவதும் சிதைவடைந்த கட்டிகளால் பாதிக்கப்பட்டு இருந்த நபருக்கு 3 முறை முக மாற்று அறுவை சிகிச்சை.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜெரோம் ஹமொன் மரபியல் மாற்று காரணமாக ‘நியூரோபைபிரோ மெடோ சிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த 2010 ஜூலை மாதம் முதல் முறையாக முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் சில மருந்துகளை அவர் சாப்பிட்ட நிலையில் அது அவருக்கு ஒத்து கொள்ளவில்லை. இதையடுத்து ஆப்ரேஷன் செய்யப்பட்ட அவரின் புதிய முகம் கடந்தாண்டு நவம்பரில் நீக்கப்பட்டு முகம் இல்லாமல் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 22 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரின் தோல்கள் ஜெரோமுக்கு பொருத்தப்பட்டு மீண்டும் முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் மண்டை ஓடு, தோல் மற்றும் அது தொடர்புடைய அம்சங்கள் இன்னும் முழுமையாக ஜெரோமுக்கு சீரமைக்கப்பட வேண்டும். தற்போது மருத்துவமனையிலேயே தங்கியிருக்கும் ஜெரோம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.