ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ராட்சத மலைப்பாப்பின் வயிற்றில் இருந்து மனிதரின் காலணி சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
நடிகர் மாதவன் தற்போது நிறைய படங்கள் நடித்து வருகிறார். தற்போது கௌதம் மேனன் இயக்கப்போகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகத்தில் மாதவன் தான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அவர்களின் தலையை பிரித்துள்ளனர்.
கந்தமால் மாவட்டம் மிலிபடா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது இரட்டை குழந்தைகளான ஜகா – காலியா தலை ஒட்டிப் பிறந்தவர்கள். தலை ஒட்டிப் பிறந்ததால் மிகவும் சிரமப்பட்ட இவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
நடராஜனுக்கு அறுவை சிகிச்சை அளிக்க, செய்த அவசர ஏற்பாடுகளை, ஜெயலலிதாவிற்கு, சசிகலாவின் குடும்பம் ஏன் செய்யவில்லை?' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
திரு. நடராஜன் அவர்களுக்கு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை அவரது தனி மனித உரிமை.ஆனால் அது பல உண்மைகளை உலகரியச் செய்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சட்ட விதிகளுக்குட்பட்டே நடந்துள்ளது என சொல்லப்பட்டாலும் இந்த உதாரணம் எப்படி ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது.
உலகில் உணவு பலவகை! அதை சாபிடுவதிலும் பலவகை! இருப்பினும் இதெல்லாம் வேண்டாம் எனக்கூறி மும்பையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனது சொந்த முடியை சாப்பிட்டுள்ளார்.
ஆம் உண்மைதான்! மும்பை மருத்துவர்கள், 20 வயது பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து சுமார் 750கி முடியினை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.
மருத்துவர்களின் அறிகயின்படி அந்த பெண் 'ரப்யுன்செல் குறைபாட்டால்' பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், இது ஒரு அரிய வகையான நோய் எனவும் தெரிவித்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி இதுவரை மொத்தம் 88 பேருக்கு மட்டுமே இந்த நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இரயில் விபத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கரத்தினை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சேர்த்துவைத்து மருத்துவர்கள் சாதித்தனர்.
பிரான்சில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது, பிரான்ஸ் மறுத்துவர்கள் மூலம் செய்யப்பட்ட முதல் முயற்சியாகும். இந்த அறுவை சிகிச்சையானது நான்கு மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள மைய மருத்துவமனையான யுனிவெர்சிட்டி கிரேநோப்ல் அல்பெஸ் மருதுவமனியின் இரண்டு மருத்துவர்கள் குழு இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர்.
பங்களாதேஷை சேர்ந்த 40 வயதுடைய பெண்மணி ஒருவரின் காலின் எடை மட்டும் 60 கிலோவை தாண்டியது. இவர் யானைக்கால் நோயால் பதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் ரெஜியா பேகம் எனவும், 18 ஆண்டுகளுக்கு முன்பு தனது இரண்டாவது மகள் பிறப்பினை தொடர்ந்து அதுமுதல் இந்த நோயாள பாதிக்கப்பட்டுள்ளார்.
ரெஜியா பேகமின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் அவர் தெளிவாக இல்லை என்றாலும், அவளுடைய உறவினர்கள் இவரை ஒதுக்கி வைத்திருப்பது மனஉளைச்சலை தருவதாக கூறுகிறார்.
ராஜஸ்தானில் நான்கு கால்களுடன் ஓர் அதிசிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நான்கு மருத்துவர்கள் கொண்ட மருத்துவர் குழு ஒன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கால்களை அகற்றியுள்ளனர்.
கால்களின் கூடுதல் மூட்டுகளை அகற்றியபிறகு, குழந்தை இப்போது நன்கு குணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீடியோவை காண:-
காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 200-வது குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் கருவியின் செயல்பாட்டினை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் முதல் முறையாக இரு இதயத்துடிப்புடன் கேரளாவைச் சேர்ந்த அதிசய மனிதர் உயிர் வாழ்து வருகிறார்.
இதயம் செயலிழந்த அந்த நபருக்கு பழைய இதயத்தை எடுத்துவிட்டு புதிய இதயம் பொருத்தாமல், மருத்துவர்கள் இரண்டு இதயத்தை ஒன்றோடு ஒன்று இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம், இரண்டு இதயங்களும் சுமையை சமமாக பங்கிட்டுக் கொள்ளும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்த குழந்தையின் தண்டுவடத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சந்தானத்தின் மனைவி ரேகா. இந்நிலையில் ரேகா வயிற்றில் வளர்ந்த குழந்தையுடன் கட்டி ஒன்றும் வளர்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கருவை கலைக்க முடியாத சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.5 கிலோ எடையுடன், 250 மி.லி ரத்தத்துடன் காணப்பட்டது. குழந்தையின் எடை 6 கிலோவாக இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற சூழலில், கட்டி வாரத்திற்கு 2செ.மீ அளவிற்கு வளரத் தொடங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.