அற்புதமான பழம் நாகப்பழம்! ஆனால் இந்த ‘3’ காம்பினேஷனுடன் இணைந்தால் ஆபத்து

Black Plum Bad Combinations: மலச்சிக்கலை போக்கும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நாகப்பழத்தை இந்த காம்பினேஷன்களில் சாப்பிட வேண்டாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 5, 2022, 08:47 AM IST
  • மலச்சிக்கலை போக்கும் அற்புதமான பழம் நாகப்பழம்
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நாவற்பழம்
  • நீல நிறத்தில் அழகைக் கொடுக்கும் அற்புதப் பழம்
அற்புதமான பழம் நாகப்பழம்! ஆனால் இந்த ‘3’ காம்பினேஷனுடன் இணைந்தால் ஆபத்து title=

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக உள்ளன. அப்படிப்பட்ட பழங்களில் ஒன்றுதான் நாவல் பழம். நாகப்பழம் என்றும் அழைக்கப்படும் நாகப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பண்புகள் அதிகம் உள்ளன. மலச்சிக்கலை போக்கும் அற்புதமான பழம் ஆகும். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, பற்களை சுத்தம் செய்வது, ஈறுகளில் இரத்தக்கசிவை நிறுத்துவது, எடையை குறைப்பது என நாகப்பழத்தின் நன்மைகள் மிகவும் அதிகமானவை ஆகும். நாகப்பழத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் சி, சோடியம் மற்றும் பல பண்புகள் உள்ளன. சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கவும் நாவல் பழம் மிகவும் பலனளிக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது.  

உடலில் படிந்துள்ள கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டது என நாகப்பழம் பல நன்மைகளைக் கொண்டதாக இருந்தாலும், சில உணவுப்பொருட்களுடன் இணைந்தால், இது எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும். நாகப்பழத்துடன் சேர்த்து சாப்ப்பிட்டால், ஆரோக்கியத்தை சிக்கலில் சிக்க வைக்கும் உணவுப்பொருட்கள் எவை என்று தெரிந்துக் கொண்டால் அவற்றை விலக்கலாம்.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தா அவ்வளவுதான்...உடனே இதச் செய்யுங்க

நாவற்பழத்தை உண்டவுடன், நம் நாக்கு ஊதா நிறமாக மாறுகிறது, இதனால், குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் பிடித்தமானது. ஆனால், அழகு, ஆரோக்கியத்தை விட, ஆரோக்கியத்தை குறைக்க நாகப்பழத்துடன் சேர்ந்தால் சதி செய்யும் உணவுஅள் இவை.

ஜாமூன் என பலராலும் அழைக்கப்படும் நாவற்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மஞ்சள்
மஞ்சள் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் நாவற்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாது, ஏனெனில் இந்த இரண்டு பொருட்களும் ஒன்றோடொன்று வினைபுரிந்து, வயிற்று வலி, பதற்றம் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி 

பால்
நாகப்பழத்தை ஒருபோதும் பால் அல்லது பால் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது, பாலுடன் சேர்த்து உண்டால் வயிற்று உபாதையை ஏற்படுத்தும் நாகப்பழம் என்பது பலருக்குத் தெரியாது. அஜீரணம், வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு, இந்த காம்பினேஷன் மேலும் கெடுதல் செய்யும். எனவே, நாகப்பழம் சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிட்ட பின் உடனடியாக பால் குடிக்க வேண்டாம்.

ஊறுகாய்
ஊறுகாய் சாப்பிட்டால் உணவின் ருசி கூடும், ஆனால் பெரும்பாலான உணவு நிபுணர்கள் ஊறுகாய் உடலுக்கு கேடு என்று பரிந்துரைக்கின்றனர். ஏற்கனவே ஆரோக்கியமற்றது என்று சொல்லப்படும் ஊறுகாயுடன் சேர்ந்தால், நாகப்பழம் தீமையையே கொடுக்கும். நாகப்பழம் சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் ஊறுகாயை உட்கொண்டால், வாந்தி, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற உடல் கோளாறுகள் ஏற்படலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News