மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் இந்த 6 அறிகுறிகள் தோன்றுமாம்

மாரடைப்பு வருவதற்கு முன்பு, உங்கள் உடலில் பல வகையான அறிகுறிகள் தென்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே நீங்கள் இதை அலட்சியப்படுத்த வேண்டாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 3, 2022, 11:06 AM IST
  • மாரடைப்புக்கு முன் இந்த 6 அறிகுறிகள் தென்படும்
  • அலட்சியப்படுத்த வேண்டாம்
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் இந்த 6 அறிகுறிகள் தோன்றுமாம் title=

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் அது ஆரோக்கியமின்றி இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் மருந்துகளைச் சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், மாறிவரும் வாழ்க்கைமுறையில் உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள், மிக முக்கியமாக மன அழுத்தத்தை தவிர்க்கவும், ஏனெனில் இது மாரடைப்புக்கு மிக முக்கியமான காரணம். இது தவிர, அதிகரித்த கொலஸ்ட்ரால், இதயத்தை தகுதியற்றதாக்கும். எனவே இதய ஆரோக்கியத்தில் இடையூறு ஏற்படும் போது காணப்படும் பொதுவான அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

மாரடைப்புக்கு முன் இந்த 6 அறிகுறிகள் தென்படும்
1. மார்பில் அசௌகரியம் ஏற்பட்டால் அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் நெஞ்சு வலி இதய நோயின் பொதுவான அறிகுறியாகும். மார்பு வலி, இறுக்கம் மற்றும் அழுத்தம் போன்ற உணர்வு மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம், ஆனால் நெஞ்சு வலி இல்லாமல் மாரடைப்பு ஏற்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | வெயிலில் வெள்ளரிக்காய் தரும் வேற லெவல் நன்மைகள் இதோ 

2. இது தவிர சோர்வு, அஜீரணம், வயிற்று வலி போன்றவற்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் இதயம் நோயுற்றால், நீங்கள் சோர்வாக உணர ஆரம்பிக்கிறீர்கள். அத்தகைய சூழ்நிலையில், வயிற்று வலி ஏற்படலாம்.

3. இது தவிர, உடலின் இடது பக்கத்தில் வலி இருப்பதும் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். 

4. இதய நோய்க்கு ஆளானவர்களின் இதயம், ரத்தத்தை உடல் முழுமைக்கும் அனுப்ப இயலாத நிலையில் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான அளவிலான ரத்தம் மூளைக்குக் கிடைக்காவிட்டால், தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.  

5. தொண்டை அல்லது தாடை வலி கூட மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். நுரையீரலில் கோத்திருக்கும் நீர், சளியை ஏற்படுத்தும். சளி நுரைபோல இளஞ் சிவப்பு நிறத்தில் மாறும்.  இது மூச்சுவிடுவதைப் பாதிக்கும். 

6. இதயம் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்கள் அதிகக் களைப்பாகவும் சோர்வாகவும் உணர்வார்கள். இதயத்தின் திறன் குறைவாக இருப்பதால், இதயத்தில் இருந்து ரத்தம் சரியாகப் பிற பகுதிகளுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 5 இயற்கை உணவுகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News