இந்தக் கொரோனா காலத்தில், ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக தோன்றினாலும், அவை பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குழந்தைகள் ஆன்லைன் வகுப்பின் (Online Classes) போது, கணினியில் தொடர்ந்து நேரத்தை செலவழிப்பது மட்டுமல்லாமல், பிற நேரங்களில் டிவி பார்க்கின்றனர். கண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் என்று கண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து டிஜிட்டல் திரையை குழந்தைகள் பார்த்து வருவதால், கண்களில் நீர் வழிதல், கண் எரிச்சல், கண்கள் சிவத்தல் போன்று பல பிரச்சினைகள் உருவாகும். இதனால் கண் பார்வைக் குறைபாடும் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ALSO READ | உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!
இதற்காக கண் மருத்துவர்கள், இந்த பாதிப்பை குறைக்கும் சில யோசனைகளை வழங்கியுள்ளனர். குழந்தைகள் உட்கார்ந்து இருக்கும் வரை வெளிச்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதோடு, மானிட்டரில் உள்ள பிரைட்னெஸை குறைத்து வைக்குமாறு அறிவுறுத்துகின்றன.
மருத்துவர்கள் (Doctors) 20-20-20 விதியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதாவது ஒவ்வோரு 20 நிமிடத்திலும், 20 வினாடிகள் இடைவெளி எடுத்துக் கொண்ட்ய், 20 அடி தூரமுள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்கு பார்க்க வேண்டும்.
மேலும் 2.5 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து மானிட்டரில் வேலை செய்யக் கூடாது.
உணவை பொறுத்துவரை கண்களுக்கு நன்மையான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஃப்ளாக்ஸ் விதைகள், மீன் உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். அதோடு விட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகள், விட்டமின் பி, பி-12 நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சோயா பச்சை காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதோடு, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண் பரிசோதனையை அவ்வபோது மேற்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால், பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
ALSO READ | உலகின் தடுப்பூசி மையமாக இந்தியா விளங்குகிறது: ஐநா தலைவர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR