ப்பாளியில் என்னற்ற நன்மைகள் இருப்பதை அனைவரும் அறிந்ததே. அதேசமயம் பப்பாளி மட்டுமன்றி அதன் மரமே மருத்துவ குணங்கள் அடங்கியதுதான். பொதுவாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும்போது, ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு ஏற்படுகிறது. அப்படி ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு ஏற்பட்டால், அவருக்கு பப்பாளி இலை ஜூஸ் கொடுத்து ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். நோயின் தீவிரத்தில் இருந்து மீட்கலாம்.
பப்பாளி (Papaya) பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் ஏவாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது. பலரின் வீடுகளிலும் சாதாரணமாக காணப்படும் பப்பாளி இலையில் இவ்வளவு நன்மையா (Diabetes) என்று வியக்கும் வகையில் நன்மைகள் இருக்கிறது.
ALSO READ | பப்பாளி பழத்தால் பாதிப்பு கூட வருமா? ஆபத்தான எதிர்விளைவுகள் இதோ!!
* டெங்கு, சிக்கன் குனியா, டைஃபாய்டு போன்ற நோய்களுக்கு பப்பாளி இலைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை இந்த நோய்களுக்கான பிரதியேக ஊசி , மாத்திரைகள் இல்லை என்பதால் பப்பாளி இலைகள்தான் முதன்மை மருத்துவமாக உள்ளது.
* இரத்ததில் குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்க பப்பாளி இலை உதவுகிறது.
* வாயு தொல்லை, வயிறு மந்தம், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு பப்பாளி இலை சிறந்தது. இதில் நார்ச்சத்து இருப்பதால் வயிறு பிரச்னை, செரிமாணப் பிரச்னைகளுக்கு உதவும்.
* பப்பாளி ஜூஸ் குடிப்பதால் சருமத்தில் பொலிவு அதிகரிக்கும். பப்பைன் என்னும் வேதிப்பொருள் இருப்பதால் அது இயற்கையாகவே இறந்த செல்களை நீக்கி சருமத்தை பழுதுபார்க்கும்.
* பப்பாளி சாறை தலை முடியின் வேரில் படும்படி தேய்த்துவிட்டால் முடி வளர்ச்சி சீராக இருக்கும்.
* பப்பாளி இலை புற்றுநோயை தவிர்க்க பாரம்பரிய மருத்துவமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனால் பப்பாளி இலை சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம்.
ALSO READ | ஜூஸ் அல்லது டீயுடன் மருந்து சாப்பிடுகிறீர்களா? உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR