PCOS என்றால் என்ன? எளிய வழிகளில் இதை கட்டுப்படுத்துவது எப்படி?

PCOS problem: இதை முழுமையாக குணப்படுத்த முடியுமா? சில எளிய நடவடிக்கைகளின் மூலம் பிசிஓஎஸ்-ஐ எளிதாக கட்டுக்குள் வைத்திருக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 8, 2022, 04:26 PM IST
  • PCOS-ஐ கட்டுப்படுத்துவது எப்படி?
  • இது பெண்களின் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களில் ஒன்றாகும்.
  • இந்த நோயில், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, அதன் காரணமாக எடை அதிகரிக்கிறது.
PCOS என்றால் என்ன? எளிய வழிகளில் இதை கட்டுப்படுத்துவது எப்படி? title=

PCOS-ஐ கட்டுப்படுத்துவது எப்படி: சமீபத்தில், நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பிசிஓஎஸ் பற்றி எழுதியிருந்தார். அவர் தனது பதிவில், தனக்கு பிசிஓஎஸ் இருப்பதாகவும், சில காலமாக மோசமான ஹார்மோன் பிரச்சினையால் அவதிப்படுவதாகவும் எழுதினார். இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்காக, தான் உடற்பயிற்சிகள் செய்வதாகவும், நல்ல உணவை எடுத்துக்கொள்வதோடு நன்றாக தூங்குவதாகவும் தெரிவித்திருந்தார். ஸ்ருதிஹாசனின் இந்த குறிப்புகளை நீங்களும் பின்பற்றினால், இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

பிசிஓஎஸ் என்றால் என்ன?

பாலிசிஸ்டிக் ஓவரிஸ் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது பெண்களின் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களில் ஒன்றாகும். இந்த நோயில், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, அதன் காரணமாக எடை அதிகரிக்கிறது. 

மேலும் படிக்க | காது வலி பாடாய் படுத்துதா: இப்படி செஞ்சி பாருங்க, நிவாரணம் கிடைக்கும் 

இதனால் மாதவிடாய் ஒழுங்கற்றதாகிறது. முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நோயில், கருப்பையில் சிறிய நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இது மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது,  மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பும் இதில் உள்ளது. இந்த நோயில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

பிசிஓஎஸ்- ஐ எவ்வாறு சரி செய்வது

இதை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதை கட்டுப்படுத்த நல்ல உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இந்த நோயை கட்டுக்குள் வைத்திருக்க, ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். பிசிஓஎஸ் எடை குறைவதால் குறையத் தொடங்குகிறது. அதிக எடையின் காரணமாக பிசிஓஎஸ் அதிகரிக்கிறது. இதனால் பிரச்சனைகள் இன்னும் அதிகரிக்கிறது.

என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும்

- பிசிஓஎஸ்-ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடைப்பயிற்சி சிறந்த வழியாகும். தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் எடை சரியாக இருக்கும்.

- ஏரோபிக், கார்டியோ அல்லது உடல் எடையை குறைக்கும் எந்த வகையான உடற்பயிற்சியும் இதற்கு உதவும். நடனத்தில் ஆர்வம் உள்ளவர்கள் நடனமாடியும் உடற்பயிற்சி செய்யலாம். 

- எடை குறைவாக இருப்பது உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் பிசிஓஎஸ் காரணமாக ஏற்படக்கூடிய பிற நோய்களின் வாய்ப்புகளை குறைக்கிறது. மாதவிடாயும் சீராகிறது. 

- மற்றொரு சிறந்த வழி யோகா. கபால்பாதி பிசிஓஎஸ்-ஐ குறைக்க சிறந்த யோகாசனமாகும். தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது கபாலபாதி செய்வதன் மூலம் பிசிஓஎஸ் குறையும். இது தவிர, அனுலோம் விலோம், பிரமாரி மற்றும் பிராணாயாமம் ஆகியவை ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நடந்தாலே மூச்சு வாங்குதா., அதை அலட்சியமாக விட வேண்டாம்.! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News