ஸ்லிம்மா இருப்பவர்களின் ப்ளட் குரூப் எது? இந்த ரத்த குரூப்காரங்க இளைக்க முடியாதா?

Blood Group: ஒல்லியாக இருப்பவர்களின் ரத்த வகைக்கும், உடல் பருமனாய் இருப்பவர்களின் ரத்த வகைக்கும் உள்ள தொடர்பை தெரிந்துக் கொண்டால், உடல் இளைக்கும் முயற்சியில் வெற்றி பெறலாம்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 26, 2023, 02:03 PM IST
  • உடல் இளைக்கும் முயற்சி செய்பவரா?
  • ஒல்லியாக இந்த டிப்ஸ் பயனளிக்கும்
  • ரத்தம் என்ன வகை என்பதற்கும் உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பு
ஸ்லிம்மா இருப்பவர்களின் ப்ளட் குரூப் எது? இந்த ரத்த குரூப்காரங்க இளைக்க முடியாதா? title=

புதுடெல்லி: நம்மில் பெரும்பாலோர் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறோம். அதிகரித்து வரும் எடையைக் குறைக்க, பல மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறோம் மற்றும் பல வகையான கடுமையான உணவு முறைகளைப் பின்பற்றுகிறோம். ஆனால் என்ன முயற்சி செய்தாலும், உடல் இளைப்பது என்பது பிரம்மபிரயர்த்தனமாக இருக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை நீங்கள் எப்போதாவது அறிய முயற்சித்தீர்களா?

உங்கள் இரத்தம் எந்த க்ரூப் என்பதும், உடல் எடையை தீர்மானிக்கும் என்பது தெரியுமா? சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். வேறு சிலரோ, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும், கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும் சரியான எடையில்  இருக்கிறார்கள். அதே சமயம், சிலர் அதிக உடற்பயிற்சி செய்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் தவிக்கின்றனர்.

ரத்த வகைக்கும் உடல் எடைக்கும் தொடர்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அப்படி என்றால், எந்த இரத்த க்ரூப் உள்ளவர்களுக்கு உடல் எடை பராமரிப்பு சாத்தியமாகிறது என்பதை தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆவல் இருக்கும். அதேபோல், எந்த ரத்த குரூப்பை சேர்ந்தவர்கள், குண்டாக இருப்பார்கள் என்பதையும் தெரிந்துக் கொள்ளவும் ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.

மேலும் படிக்க | உடல் எடை வேகமாக குறைய..சாப்பிட்ட பிறகு ‘இதை’ செய்தால் போதும்..!

உடல் எடையும் இரத்த க்ரூப்பும்

உணவுப் பழக்கத்தை எளிதில் மாற்றிக் கொள்பவர்கள், எளிதில் உடல் எடையை குறைக்கலாம் என சுகாதார நிபுணர்கள். கூறுகின்றனர். O+ மற்றும் B+ இரத்த வகையைக் கொண்டவர்கள், ஒல்லியாக இருக்கும் வாய்ப்பு அதிகமாம்! உண்மையில், B+ இரத்தக் குழுவைக் கொண்டவர்கள் அதிக அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் (BMR) உடையவர்கள். இதனால், அவர்களின் எடை அதிகரிப்பதில்லை.

அதே நேரத்தில், AB+ மற்றும் AB- இரத்தக் குழுக்கள் உள்ளவர்கள் எடையைக் குறைப்பது மிகவும் கடினம். ஏனெனில் இந்த இரண்டு இரத்த பிரிவுகளுக்குள் வருபவர்களுக்கும், தங்கள் உணவுப் பழக்கத்தை எளிதில் மாற்றிக் கொள்ள முடிவதில்லை.

மேலும் படிக்க | வைரல் காய்ச்சலுக்கு பூச்சாண்டி காட்டும் கிச்சன் கில்லாடி மசாலாக்கள்

சரி, எந்த ரத்த க்ரூப், எது போன்ற உணவை உண்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று தெரிந்துக் கொண்டால், உடல் இளைக்கும் பயணத்தை சுலபமாக மேற்கொள்ளலாம்.

’ஓ’ இரத்த க்ரூப்
O இரத்த பிரிவு உள்ளவர்கள் தங்கள் உணவில் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் உணவில் காய்கறிகள் மற்றும் மீன்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால் அத்தகையவர்கள் பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும். எடையைக் கட்டுப்படுத்த கடல் உணவுகள், சிவப்பு இறைச்சி, ப்ரோக்கோலி, கீரை மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

’ஏ’ இரத்த க்ரூப்
A இரத்த பிரிவு உள்ளவர்கள் தங்கள் உணவில் டோஃபு, முழு தானியங்கள் மற்றும் கடல் உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் உணவில் அன்னாசி, அன்னாசி, ஆலிவ் எண்ணெய், கடல் உணவு, காய்கறிகள் மற்றும் சோயாவை அதிகம் உட்கொள்ளுங்கள். பால் பொருட்கள், சோளம், பீன்ஸ் மற்றும் கோதுமை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

 

பி இரத்த குரூப்
B இரத்தக் குழுவில் உள்ளவர்கள் தங்கள் உணவை குறிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இறைச்சி, பழங்கள், கடல் உணவுகள், பால் மற்றும் முழு தானியங்கள் சேர்க்க வேண்டும். உடல் எடையை குறைக்க, பச்சை காய்கறிகள், கல்லீரல், முட்டை மற்றும் மதுபானம் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். சோளம், கோழி, கோதுமை மற்றும் வேர்க்கடலை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
 
ஏபி இரத்த க்ரூப்
AB இரத்த பிரிவு உள்ளவர்கள் பால், டோஃபு, மீன், பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைக்க, டோஃபு, கடல் உணவுகள், பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். கோழி, சோளம், கிட்னி பீன்ஸ் மற்றும் பக்வீட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

எடையைக் கட்டுப்படுத்த, சரியான உணவுடன் சில நிமிடங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடற்பயிற்சி இல்லாமல், உடல் எடையை பராமரிக்க முடியாது.

மேலும் படிக்க | வேகமா உடல் எடையை குறைக்க.. இந்த பானங்கள் பக்காவா உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News