மூலம் நோய்க்கு வீட்டிலேயே செய்யும் இயற்கை மருந்து...

மிகுந்த வலி உண்டாக்கும் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபதுவது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்...

Last Updated : Dec 8, 2019, 07:52 PM IST
மூலம் நோய்க்கு வீட்டிலேயே செய்யும் இயற்கை மருந்து... title=

மிகுந்த வலி உண்டாக்கும் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபதுவது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்...

மிகுந்த வலி உண்டாக்கும் பைல்ஸ் பிரச்சனை எப்படி வருகிறது தெரியுமா?... இந்த பிரச்சனையால் ஆசனவாயைச் சுற்றியுள்ள நரம்புகளில் வீக்கம் மற்றும் எரிச்சல் உண்டாகிறது, எனவே இந்த பிரச்சனை கொண்டுள்ள நபர் தினம் தினம் மரண வலியை அனுபவிக்கின்றனர்.

இது நிறைய வலியை ஏற்படுத்துகிறது, குறிப்பாக மலம் வெளியேற்றத்தின் போது மரண வலியை உண்டாக்குகிறது. சில சந்தர்ப்பங்களில், குடல் இயக்கத்தின் போது இரத்தப்போக்கு ஒரு பிரச்சனையாகவும் இருக்கலாம். இந்த பிரச்சினைக்கு சிகிச்சையளிப்பதற்காக பெரும்பாலான மக்கள் மருத்துவரிடம் செல்ல தயங்குகிறார்கள், ஏனெனில் இது வெட்கக்கேடானது என அவர்கள் நினைப்பதால். இதன் காரணமாக தான் இந்த பிரச்சனைக்கு மக்கள் வீட்டிலேயே தீர்வு காண விரும்புகின்றனர். மூலத்தில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே செய்ய சில செயல்பாடுகளை நான் இன்று உங்களுக்கு கூறப்போகிறோம்...

  • உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதன் காரணமாக மூலம் பிரச்சனை கொண்ட இடத்தை குணப்படுத்த இயலும்.
  • உங்கள் நகங்களை குறுகியதாக வைத்திருங்கள், அந்த இடத்தில் கீறாதீர்கள், ஏனெனில் அவ்வாறு செய்வது தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
  • கழிப்பறை இருக்கையில் நீண்ட நேரம் உட்கார வேண்டாம், அதை கட்டாயமாக்கவும் வேண்டாம். அதேவேளையில் காலை கடன் கழிப்பது போன்ற குடல் அசைவு வேலைகளை தவிர்க்காமல் எப்போதும் கவனித்துக் கொள்ளுங்கள்.
  • எப்போதும் பருத்தி உட்புற ஆடைகளை மட்டுமே அணியுங்கள்.
  • மலம் கழித்தலின் போது, ​​எளிமையாக கழிவுகளை அகற்றும் வகையில் குடல் அசைவிற்கு ஒத்துழைக்குமாறு அமருதல் வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிக்கு பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண மருந்து தடவுகிறார்கள். இது உடனடி நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், இந்த ஓய்வு ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே, மற்றும் பல முறை மருந்து தடவிய பிறகும், பிரச்சினை அப்படியே இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
  • ஒரு தொட்டியில் சூடான நீரை நிரப்பி அதில் கல்லு உப்பு சேர்க்கவும். பின்னர் இந்த நீர் தொட்டியில் அமருவது வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இவ்வாறு குளிர்ந்த நீர் இருக்கையில் இருந்து சூடான நீர் இருக்கையில் உட்கார்வது சிறுது நிவாரணம் அளிக்கும்.

Trending News