மாதுளை தோல்கள்: மாதுளையில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், மாதுளம் பழத்தை சாப்பிட்ட பின், அதன் தோல்கள் பயனற்றவை என்று மக்கள் கருதி குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார்கள். ஆனால் மாதுளை தோல்கள் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மாதுளை தோல்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மாதுளை விதைகள் நம் உடலுக்கு மிகவும் நன்மை செய்வதை போல, அதன் தோலும் மிகவும் நன்மை பயக்கும். அதில் பல ஆரோக்கிய ரகசியங்கள் ஒளிந்துள்ளன. அதை அறிந்த பிறகு நீங்களும் மாதுளை தோலை தூக்கி எறியாமல், பாதுகாத்து வைக்க தொடங்குவீர்கள். மாதுளை தோலை எப்படி, எந்தெந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்.
ஆரோக்கிய நலன்கள் நிறைந்த மாதுளை
மாதுளை விதைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். மாதுளையை தினமும் உட்கொள்பவர்கள், ரத்தசோகையால் பாதிக்கப்படுவதில்லை. ரத்த சோகை உள்ளவர்கள், மாதுளம் பழச்சாற்றை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அந்த குறைபாடு நீங்கும். இது தவிர, இது உங்கள் வயிற்றை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். மாதுளை வயிறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதுடன் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இது நம் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்
மாதுளம்பழத்தை உரிக்கும்போது அதன் தோலை எடுத்து உலர வைக்கவும். அதன் பிறகு அதனை பொடி செய்து இந்த பொடியை தினமும் உட்கொள்ளவும். இதன் மூலம் நீங்கள் நிறைய மாற்றங்களைக் காண்பீர்கள்.
மேலும் படிக்க | நீரிழிவு முதல் ஆஸ்டியோபோரோசிஸ் வரை... பச்சை வெங்காயம் செய்யும் மாயங்கள்!
தோலின் ஆரோக்கிய நலன்கள்
பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால், உங்கள் சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். இது தவிர, தொண்டை வலிக்கு நிறைய நிவாரணம் கிடைக்கும். இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக உடல் எடையைக் குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது
மாதுளை தோல் உங்கள் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. காது பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காதுகளில் வலி அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள், இதனை உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனைக்கு தீர்வைத் தரும் ‘சூப்’... தயாரிக்கும் முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ