பச்சையா சாப்பிட்டா நோயெல்லாம் கிட்டவே வராது! நோய் தீர்க்கும் வெங்காயத்தின் மருத்துவ குணம்...

Benefits Of Onion : செரிமானத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை பல நன்மைகளை கொண்டுள்ள வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 26, 2024, 10:45 PM IST
  • செரிமானத்தை மேம்படுத்தும் வெங்காயம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பச்சை வெங்காயம்
  • நோய் தீர்க்கும் வெங்காயத்தின் மருத்துவ குணம்
பச்சையா சாப்பிட்டா நோயெல்லாம் கிட்டவே வராது! நோய் தீர்க்கும் வெங்காயத்தின் மருத்துவ குணம்... title=

வெங்காயம் என்பது உலகில் எல்லா இடங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படும் உணவுப்பொருள் என்று சொல்லலாம். உணவுப்பொருளாக பயன்படுத்தப்படும் வெங்காயம் காய் மட்டுமல்ல, ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். மஞ்சள், வெள்ளை, சிவப்பு என பல்வேறு வண்ணங்களில் விளையும் வெங்காயம், அதன் தனித்துவமான சுவை மற்றும் சத்து ஆகியவற்றின் காரணமாக தவிர்க்க முடியாத ஒன்று என்றே சொல்லலாம்.

சில குடும்பங்களில் வெங்காயம் உணவில் சேர்க்கவே மாட்டார்கள். அதற்கு மதரீதியான காரணங்களும் இருக்கலாம், அல்லது அதன் வாசனை பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால், வெங்காயம் பொதுவாக அனைவருக்கும் செய்யும் நன்மைகளும், அது உணவின் சுவையை கூட்டுவதாலும் பிரபலமானது.

அதிலும், பச்சை வெங்காயத்தை உட்கொள்வதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. உணவில் பச்சை வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பச்சை வெங்காயத்தை உட்கொள்வதால் என்ன நன்மை?

நோய் எதிர்ப்பு சக்தி 
பச்சை வெங்காயம் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாக இருப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க உதவும் பச்சை வெங்காயம், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களைத் தடுக்கிறது.

இருதய ஆரோக்கியம்
வெங்காயத்தில் குர்செடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதுடன், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பச்சை வெங்காயத்தை உட்கொள்வதால் இரத்த ஓட்டம் மேம்படும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைத் தடுக்கவும் பச்சை வெங்காய நுகர்வு உதவுகிறது.

மேலும் படிக்க | எச்சரிக்கை! காலை உணவை மிஸ் பண்ணவே கூடாது... காரணங்கள் இதோ..!!

செரிமானம்
பச்சை வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து,  செரிமானத்திற்கும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதற்கும் அத்தியாவசியமானது. ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தும் நார்ச்சத்து, மலச்சிக்கலை சீர்படுத்தி, குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

அழற்சி எதிர்ப்பு குணம்
குவெர்செடின் நிறைந்த பச்சை வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை உடலில் ஏற்படும் அழற்சியின் அளவைக் குறைப்பதுடன், கீல்வாதம், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை சீராக்க உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்
சல்பர் நிறைந்த வெங்காயம், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கால்சியம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கும் சல்ஃபர் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைத் தடுக்கிறது.

மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வெங்காயம்
பச்சை வெங்காயத்தில் உள்ள சத்துகள், மூளையில் நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியை அதிகரிக்கின்றன, இது மேம்பட்ட நினைவாற்றல் மற்றும் கவன குவிப்புக்கு உதவுகிறது.

மேலும் படிக்க | மூளையின் ஆற்றலை மேம்படுத்த... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!

புற்றுநோய் தடுப்பு
பச்சை வெங்காயத்தில் உள்ள கலவைகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன. வெங்காயத்தில் உள்ள குவெர்செடின், ஃபிளாவனாய்டுகள் மற்றும் அல்லிசின் போன்ற கந்தக கலவைகள், உடலில் புற்றுநோய் செல் வளர்ச்சியைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

சருமத்தை பராமரிக்கும் பச்சை வெங்காயம்
பச்சை வெங்காயத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பச்சை வெங்காயத்தை தொடர்ந்து உட்கொண்டால், தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் ஆகியவை குறைந்து ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.

இரத்த சர்க்கரை அளவு
பச்சை வெங்காயத்தில் உள்ள குரோமியம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலுள்ள குரோமியம் இன்சுலின் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.

உடல் பருமன் குறைப்பு

பச்சை வெங்காயத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது, இது எடை இழப்புக்கு பங்களிக்கிறது. நார்ச்சத்து ஒருவரை முழுமையாகவும் திருப்தியாகவும் வைத்திருக்க உதவுகிறது, அதிகமாக சாப்பிடுவதற்கான ஆசையைக் குறைக்கிறது. இதனால் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது).

மேலும் படிக்க | IT Employees: ஐடி செக்டார்ல வேலை செய்றீங்களா? கொலஸ்ட்ரால், அனீமியா உடல் பருமன் ஆபத்து எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News