புரதச்சத்து நிறைந்த உணவு: நமது உடலின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் புரதம் மிகவும் முக்கியமானது. இது நமது செல்களின் செயல்பாட்டிற்கு உதவும் ஒரு நுண்ணூட்டச் சத்து. அதாவது, அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகள் சரியாக தொடர வேண்டுமானால், புரதச்சத்து குறையாத உணவுகளை உண்ண வேண்டும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ், எந்த புரதச்சத்து நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும் என்பது பற்றி சில கருத்துகளை தெரிவிக்கிறார். நமது உடலுக்கு தேவையான சரியான புரதச்சத்தை அளிக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
புரதம் நிறைந்த உணவுகள்
1. முட்டை
முட்டை புரதத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது தவிர, வைட்டமின்கள் மற்றும் இயற்கை கொழுப்புகள் இதில் காணப்படுகின்றன. அவை உடலுக்கு மிகவும் முக்கியமானவையாகும். மக்கள் பெரும்பாலும் காலை உணவில் முட்டையை சாப்பிட விரும்புகிறார்கள்.
2. பால்
பால் முழுமையான ஒரு உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. மேலும் இது புரதத்தின் நல்ல மூலமாகும். 100 கிராம் பாலில் சுமார் 3.6 கிராம் புரதம் உள்ளது. ஆகையால் தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது நமது உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்கும்.
மேலும் படிக்க | Migraine: ஒற்றைத் தலைவலிக்கு ‘குட் பை’ சொல்ல உதவும் சில யோகாசனங்கள்!
3. இறைச்சி
கோழிக்கறி அல்லது ரெட் மீட் இரண்டிலும் ஏராளமான புரோட்டீன்கள் காணப்படுவதால் அசைவ உணவுகளை உண்பவர்களுக்கு இந்த சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இருப்பினும், இறைச்சி மிகவும் கொழுப்பாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அதனால் உடலுக்கு ஆபத்து எழும்.
4. சோயாபீன்
சைவ உணவு உண்பவர்களுக்கு, சோயாபீன் புரதத்தின் தேவையை அதிக அளவில் பூர்த்தி செய்கிறது. 100 கிராம் சோயாபீன்ஸில் சுமார் 36.9 கிராம் புரதம் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
5. பருப்பு வகைகள்
பருப்பு நம் அன்றாட உணவில் ஒரு முக்கிய பகுதியாகும். இது சாதம் மற்றும் ரொட்டி இரண்டிலும் அதிகம் உள்ளது. இது நமது தினசரி புரதத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க இந்த உணவை சாப்பிடுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ